ராயபுரம் முதல் கோடம்பாக்கம் வரை.. சென்னையில் 6 கொரோனா ஹாட்ஸ்பாட்கள்.. மிக கவனமாக இருக்க வேண்டும்!
சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் 6 முக்கியமான மண்டலங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் 6 முக்கியமான மண்டலங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என்று பரவி வந்த கொரோனா தற்போது தினமும் 80-90 என்ற வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 834 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 27 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா காரணமாக மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர்.

சென்னை நிலை என்ன?
தமிழகத்தில் சென்னைதான் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 166 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்து கோயம்புத்தூரில் 66 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 58 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் இரண்டு மண்டலங்களில் மட்டும் கொரோனா ஏற்படவில்லை.

மண்டலங்கள் எப்படி?
சென்னையில் மொத்தம் 13 மண்டலங்கள் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூரில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவொற்றியூர், வளசரவாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராயபுரத்தில் 45 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தேனாம்பேட்டை நிலை
தேனாம்பேட்டையில் 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவிக நகரில் 24 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பெருங்குடியில் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 19 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அண்ணாநகரில் 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும்.

6 மண்டலங்களில் மிக மோசம்
இதில் 6 மண்டலங்கள் மிக அதிக அளவில் சென்னையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது .
- ராயபுரத்தில் 45 பேர்
- திருவிக நகரில் 24 பேர்
- கோடம்பாக்கத்தில் 19 பேர்
- அண்ணாநகரில் 17 பேர்
- தண்டையார்ப்பேட்டையில் 14 பேர்
தேனாம்பேட்டையில் 12 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பகுதிகளில் கொரோனா இன்னும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

அறிவுரை
இந்த பகுதிகள் சென்னையில் கொரோனா ஹாட்ஸ்பாட் போல மாற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஹாட் ஸ்பாட் என்பது ஒரு இடத்தில் அதிக நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அங்கு பலருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பது ஆகும். சென்னையில் இங்குதான் கொரோனா அறிகுறியோடு வீட்டில் வைக்கப்பட்டு மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இதனால் இந்த 6 பகுதிகளில் இருக்கும் மக்கள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளியே செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications