4 நாட்களாக மோசமாகும் நிலை.. தமிழகத்தில் ஒரே நாளில் 6993 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 220716 ஆக உயர்வு!
சென்னை: தமிழகத்தில் 6993 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 2,20,716 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. கேஸ்கள் குறியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தினமும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கேஸ்கள் வருகிறது. கடந்த 4 நாட்களாக 6800க்கும் அதிகமான கேஸ்கள் தமிழகத்தில் வருகிறது.
ஆனால் சென்னையில் கேஸ்கள் எப்போதும் போல 1300க்கும் குறைவாகவே இருக்கிறது. இன்று சென்னையில் 1138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை நிலை
சென்னையில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 95857 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று 5723 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மொத்தமாக 162249 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஒரு வகையில் டிஸ்சார்ஜ் வேகமாக அதிகரித்து வருகிறது.

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 54896 ஆக உள்ளது. சென்னையில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 13064 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 77 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 3571 பேர் பலியாகி உள்ளனர்.

சென்னைக்கு அடுத்து
சென்னைக்கு அடுத்து இன்று திருவள்ளூரில் 474 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 12320 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 448 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 12717 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று காஞ்சிபுரத்தில் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 7257 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

தமிழகம் சோதனை
இன்று 63250 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 2414713 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 61342 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 2324080 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications