88% பேருக்கு அறிகுறியே இல்லை.. ஆனாலும் கொரோனா.. தமிழகத்தின் நிலை இதுதான்.. ஷாக்கிங் பின்னணி!
சென்னை: தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நபர்களில் 88% பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை.
கொரோனா உலகம் முழுக்க இரண்டு வகைகளில் பரவி வருகிறது. அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகள், அறிகுறியே இல்லாத கொரோனா நோயாளிகள். இதில் அறிகுறி உள்ளவர்களுக்கு காய்ச்சல், இருமல், தும்மல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

அறிகுறி இல்லாத நபர்களுக்கு இப்படி எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் கொரோனா ஏற்படும். இவர்களுக்கு தங்களுக்கு கொரோனா இருப்பதே தெரியாத நிலை இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தற்போது அறிகுறி இல்லாமல்தான் அதிகமாக கொரோனா கேஸ்கள் பரவி வருகிறது. முக்கியமாக மகாராஷ்டிராவில் ஏற்பட்ட கொரோனா கேஸ்களில் 70% அறிகுறி இல்லாத கேஸ்கள் ஆகும். சென்னையில் ஏற்பட்ட கேஸ்களில் 85% கேஸ்கள் அறிகுறி இல்லாமல் ஏற்பட்ட கேஸ்கள் ஆகும்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நபர்களில் 88% பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 12% கேஸ்கள் அறிகுறி உள்ள கேஸ்கள். தமிழகத்தில் அறிகுறி மூலம் கொரோனா வந்தவர்களில் 40% பேருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டுள்ளது. காய்ச்சல்தான் தமிழகத்தில் முக்கியமான கொரோனா அறிகுறியாக உள்ளது. இருமல் 37% ஏற்பட்டுள்ளது. இதுதான் முக்கிய அறிகுறி ஆகும். மற்ற அறிகுறிகள் மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.தமிழகத்தில் தொண்டை வலி 10%. மூச்சு திணறல் 9% பேருக்கு ஏற்பட்டுள்ளது. 4% பேருக்கு மூக்கில் சளி இருந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 17082ஐ ஆக உயர்ந்துள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications