உ.பியை சேர்ந்தவர்.. ரயிலில் சுற்றினார்.. தானாக வந்து சொன்னார்.. சென்னையில் கொரோனா.. என்ன நடந்தது?

சென்னையில் இரண்டாவது நபருக்கு கொரோனா ஏற்பட்டது எப்படி, அவர் எங்கிருந்து வந்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இரண்டாவது நபருக்கு கொரோனா ஏற்பட்டது எப்படி, அவர் எங்கிருந்து வந்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Corona Update: தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் தற்போதுதான் கொரோனா குறித்த அச்சம் எழ தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இரண்டு வாரம் முன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது. வெளிநாடு சென்று திரும்பிய காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டது.

    ஆனால் இவருக்கு உடனே மூன்று நாட்களில் வைரஸ் தாக்குதல் சரி செய்யப்பட்டது. அதன்பின் தற்போது இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    யார் இவர்

    யார் இவர்

    சென்னையில் இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்றுதான் உறுதி செய்யப்பட்டது. இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியை சேர்ந்தவர். அங்கிருந்து இவர் தமிழகம் வந்துள்ளார். ஆனால் நேரடியாக ரயில் இல்லாத காரணத்தால் அங்கிருந்து பேருந்தில் டெல்லி சென்றுள்ளார். பின் அங்கிருந்து ரயிலில் வந்துள்ளார்.

    சென்னை ரயில்

    சென்னை ரயில்

    டெல்லியில் இருந்து ரயிலில் சென்னைக்கு இவர் கடந்த வாரம் வந்துள்ளார். அங்கு இவருக்கு சோதனை எதுவும் செய்யப்படவில்லை. அதேபோல் இவருக்கு வைரஸ் அறிகுறிகள் எதுவும் இல்லை. சென்னையில் இவர் பணி நிமித்தம் மற்றும் உறவினர்கள் சிலரை பார்க்க வந்துள்ளார். சென்னையில் இவர் கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவராகவே வந்தார்

    அவராகவே வந்தார்

    இந்த நிலையில்தான் அவருக்கு திடீர் காய்ச்சல், இருமல், மூச்சு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு கொரோனா இருக்குமோ என்று அவரே சந்தேகம் அடைந்துள்ளார். அதன்பின் அவராகவே தனியார் மருத்துவமனையில் சோதனை செய்துள்ளார். அந்த மருத்துவர்களுக்கு சந்தேகம் வரவே அவர்கள் சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இரண்டு நாள் முன் இவரின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப் பட்டது.

    நேற்று உறுதி

    நேற்று உறுதி

    இந்த நிலையில் நேற்று இவருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இவர் சென்னையில் சந்தித்த நபர்கள் எல்லோரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால் இவர் சென்னையில் பல நபர்களை சந்தித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது கொஞ்சம் சிக்கலான விஷயம். அதே சமயம் இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இவர் நிறைய மக்களை தனது பயணத்தின் போது சந்தித்து இருக்க வாய்ப்புள்ளது.

    என்ன பயணம்

    என்ன பயணம்

    ஆம், இவர் ரயிலின்தான் சென்னைக்கு வந்துள்ளார். பேருந்தில்தான் டெல்லி சென்றுள்ளார். அப்போதெல்லாம் இவர் பலரை சந்தித்து இருக்க வாய்ப்புள்ளது. பலருடன் பழகி இருக்க வாய்ப்புள்ளது. இவர்களை எல்லாம் எப்படி கண்டுபிடிப்பது. பலர் ஏறி பாதியில் இறங்கி இருப்பார்கள். இவர்களை எல்லாம் எப்படி கண்டுபிடிப்பது என்று கேள்வி எழுந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+