Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்ப்ட்டோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று மாலை முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மதுரையை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mar 25, 2020, 3:30 pm IST

என் வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம்- நடிகர் கமல்ஹாசன். என் இல்ல மருத்துவ மையத்தில் மநீம மருத்துவர்கள் உதவி செய்வார்கள்- கமல்ஹாசன்
Mar 25, 2020, 3:18 pm IST

பீகாரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ1,000 வழங்க முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவு
Mar 25, 2020, 2:54 pm IST

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 23ஆக உயர்வு.தடையை மீறி வெளியே செல்வோரின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு
Mar 25, 2020, 2:51 pm IST

மக்கள் கூட்டம் கூடுவதால் ஒட்டுமொத்தமாக தேநீர் கடைகள்/ பழச்சாறு கடைகளை மூடவும் உத்தரவு
Mar 25, 2020, 2:42 pm IST

கொரோனா அச்சம்- சிறை கைதிகளுக்கு பரோல் வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Mar 25, 2020, 2:37 pm IST

தமிழகத்தில் 1- 9 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்- முதல்வர் அறிவிப்பு
Mar 25, 2020, 1:47 pm IST

சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் மாலை முதல் தேநீர் கடைகளை மூடுவதற்கு உத்தரவு
Mar 25, 2020, 1:47 pm IST

சமூக விலகலை கடைபிடிப்போம்! கொரோனா பரவலை தடுப்போம்- துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
Mar 25, 2020, 1:44 pm IST

டீக்கடைகளை இன்று மாலை 6 மணிக்கு மூட உத்தரவு. சென்னையில் உள்ள டீக்கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவு
Mar 25, 2020, 12:48 pm IST

மதுரையில் அமைகிறது கொரோனா பரிசோதனை மையம். ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைவதாக விஜயபாஸ்கர் அறிவிப்பு
Mar 25, 2020, 12:48 pm IST

புதுச்சேரியில் 9ம் வரை அனைவரும் ஆல் பாஸ்.. நாராயணசாமி பொளேர் அடி!
Mar 25, 2020, 11:13 am IST

நாகையில் தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்
Mar 25, 2020, 10:12 am IST

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக அதிகரிப்பு
Mar 25, 2020, 7:21 am IST

கொரோனா- கேரளாவில் இருந்து மலை வழியாக தமிழகம் வந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கினர்- 2 பேர் பலி
Mar 25, 2020, 5:59 am IST

கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு- மதுரையில் சிகிச்சை பெற்றவர் மரணம்
Mar 24, 2020, 9:46 pm IST

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
Mar 24, 2020, 8:26 pm IST

ஏழைகளின் சிரமத்தை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது
Mar 24, 2020, 7:49 pm IST

கோயம்பேடு சந்தை நாளை செயல்படும் - மாநகராட்சி அறிவிப்பு. மொத்த விற்பனை மட்டுமே அனுமதிக்கப்படும் - மாநகராட்சி அறிவிப்பு. சில்லறை விற்பனை அனுமதிக்கப்படாது - மாநகராட்சி அறிவிப்பு. பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை.
Mar 24, 2020, 7:13 pm IST

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ2,000 வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி
Mar 24, 2020, 6:04 pm IST

அனைத்து மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்படும். இன்று முதல் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஏப்ரல் 1-ந் தேதி வரை இயங்காது. மளிகை கடைகள், பால் மற்றும் இறைச்சி கடைகள் திறந்திருக்கும். மருந்து கடைகள் திறந்திருக்கும். உணவகங்கள் திறந்திருந்தாலும் உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. தேநீர் கடைகளில் 5 பேருக்கு மேல் ஒன்று கூட அனுமதி கிடையாது.
Mar 24, 2020, 6:01 pm IST

கொரோனா தடுப்பு- தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்- மாவட்ட எல்லைகள் மூடல்!
Mar 24, 2020, 4:56 pm IST

கொரோனா அச்சம்- வேலூர் மத்திய சிறையில் இருந்து 48 கைதிகள் சொந்த ஜாமீனில் விடுதலை
Mar 24, 2020, 4:38 pm IST

இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி உருவாக்கம். புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கி உள்ளது. இந்த கருவியின் விலை ரூ.80,000, ஒரு கருவியில் 100 பேரை சோதிக்க முடியும்
Mar 24, 2020, 3:28 pm IST

கர்நாடகா: மங்களூருவில் 144 தடை உத்தரவை மீறியதற்காக 7 பேர் கைது
Mar 24, 2020, 3:18 pm IST

தமிழகம் முழுவதும் கண்காணிப்பு வளையத்தில் 2,09,163 பேர்- விஜயபாஸ்கர்
Mar 24, 2020, 3:07 pm IST

608 பேருக்கு கொரோனா இல்லை, 120 பேரின் முடிவுகள் ஆய்வில் உள்ளது
Mar 24, 2020, 3:05 pm IST

தமிழகம் முழுவதும் 2,09,163 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டனர் : அமைச்சர் விஜயபாஸ்கர். 9154 பேர் தனிமையில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்கள்: விஜயபாஸ்கர். இது வரை 743 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது: விஜயபாஸ்கர். 116 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
Mar 24, 2020, 2:48 pm IST

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15- அமைச்சர் விஜயபாஸ்கர்
Mar 24, 2020, 2:18 pm IST

மதுரையில் மேலும் 7 பேர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி- மாவட்ட ஆட்சியர் வினய்
Mar 24, 2020, 2:18 pm IST

சென்னை கோயம்பேட்டில் 2.30 மணியுடன் பேருந்துகள் நிறுத்தம். மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது. 2.30 மணி வரை குறைந்த தூரம் கொண்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம். சென்னை மாநகர பேருந்துகள் மாலை 6 பிறகும் இயக்கப்படும்
READ MORE

Coronavirus attack in Tamilnadu: Latest updates live
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+