கொரோனா மரணங்கள்.. போராடும் விஷமிகள்.. குண்டாஸ் பாயும்.. சாட்டையை கையில் எடுக்கும் சென்னை கமிஷனர்
அடக்கம் செய்ய எதிர்த்தால் குண்டர் சட்டம் பாயும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்
சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டத்தில் கைது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் கடுமையாக எச்சரிக்கை விடுததுள்ளார்.
Recommended Video
உயிர் காக்கும் மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் நிகழ்வுகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.. மனிதம் மரித்துபோய்விட்டதா... நம் மக்களா இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்ற பல கேள்விகள் நம்மை குடைந்து வருகிறது.
அர்ப்பணித்து மரணத்தை தழுவிய டாக்டர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை.. சென்னையில் உயிரிழந்த ஆந்திர டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர், திருவேற்காடு பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மயானத்துக்கு சென்ற டாக்டரின் உடல் திரும்பவும் மருத்துவமனைக்கே திரும்பி வந்தது சரித்திரத்தில் நடக்காத ஒரு நிகழ்வு!!

ஜெயமோகன்
இப்படித்தான் நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடாவில் பணியாற்றி டெங்கு காய்ச்சலுக்கு பலியான டாக்டர் ஜெயமோகனின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய கோவை சிறுமுகை அருகே உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற செய்திகள் பரவின.

இடுகாடு
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்தான் சென்னையில் நரம்பியல் டாக்டரின் மரணம் நிகழ்ந்தது.. ஊரடங்கு சமயத்தில் கீழ்ப்பாக்கம் இடுகாட்டிலேயே மக்கள் திரண்டு வந்தது அதிர்ச்சியை தந்தாலும், கல்லையும் கட்டையையும் எடுத்து கொண்டு அடக்கம் செய்ய முயன்றவர்களை தாக்கியது வேதனையை தந்தது. அதனால்தான் தாமாக முன்வந்து சென்னை ஹைகோர்ட் இந்த விசாரணையை தொடங்கியுள்ளது.

கமிஷனர்
தற்போது சென்னை மாநகராட்சி கமிஷனரும் அதிரடி கடிவாளத்தை கையில் எடுத்துள்ளார்.. கொரோனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய யாராவது எதிர்ப்பு தெரிவித்தால், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரித்துள்ளார். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதை பற்றி மேலும் சொன்னதாவது:

குண்டர் சட்டம்
"டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்புடையவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களை தாக்கியும், ஆம்புலன்ஸை சேதப்படுத்தி தொடர்பாகவும் 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.. மேலும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 90 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications