ஷாக்கிங் டேட்டா.. தென்னிந்தியாவின் கொரோனா எபிசென்டராக மாறும் சென்னை.. பரிதாபகரமான நிலையில் தலைநகர்!
சென்னை: தென்னிந்தியாவின் கொரோனா எபிசென்டராக சென்னை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தென்னிந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மிக மோசமான நகரமாக, மாவட்டமாக சென்னை மாறியுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 1875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38716 ஆக உயர்ந்து இருக்கிறது.
சென்னையில் 1406 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27398 ஆக உயர்ந்துள்ளது. சென்னையின் நிலைமை மிக மோசமாக மாறி வருகிறது.

சென்னை நிலை
தமிழகத்தில் சென்னையில்தான் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. கேஸ்கள் ஒரு பக்கம் இப்படி அதிகரித்தால் இன்னொரு பக்கம் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும் 15+ பேர் தினமும் பலியாகி வருகிறார்கள். சென்னையில் இப்படி நிலைமை மோசமாகி வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.

சென்னை தினசரி கேஸ்கள்
கடந்த மாதம் வரை சென்னையில் தினசரி கேஸ்கள் 500-600 வரை என்றுதான் இருந்தது. கடந்த மாதம் இறுதியில் சென்னையில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 700 என்று ஆனது. இந்த நிலையில் தற்போது கடந்த 10 நாட்களாக சென்னையில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை 1000 என்று நிலைமை ஏற்பட்டது. தற்போது சென்னையில் தினமும் 1500 கேஸ்கள் சராசரியாக வருகிறது.

தென்னிந்தியாவில் எங்கும் இல்லை
தென்னிந்தியாவில் எங்கும் இந்த நிலைமை இல்லை. இதன் மூலம் தென்னிந்தியாவின் எபிசென்டராக சென்னை மாறியுள்ளது. சென்னைக்கு இணையான இன்னொரு நகரமான பெங்களூரில் 587 கேஸ்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளது. தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் 2,514 கேஸ்கள் மட்டுமே இதுவரை ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் 121 கேஸ்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா நிலை
ஆந்திர பிரதேசத்தில் குர்நூலில் 890கேஸ்கள் வந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் 182 கேஸ்கள் வந்துள்ளது. தென்னிந்தியாவில் இருக்கும் பெரிய மாவட்டங்கள், வளர்ந்த மாவட்டங்கள் எதிலும் இந்த அளவிற்கு அதிகமான கேஸ்கள் வரவில்லை. சென்னையில் இருந்து தென்னிந்தியாவில் பல மாநிலங்களுக்கு கொரோனா கேஸ்கள் பரவி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் வரும் நாட்களில் கேஸ்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

அதிக டெஸ்ட்
அதே சமயம் சென்னையில்தான் அதிக அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது.சென்னையில்தான் தினமும் 3000க்கும் அதிகமான கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதுவும் கூட சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகம் இருக்க காரணம் என்று கூறுகிறார்கள். மேலும் சென்னையில் சமூக பரவல் தீவிரம் அடைந்து இருக்கும்.இதனாலும் கேஸ்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications