ஒரு பக்கம் ஸ்டாலின், மறு பக்கம் கமல்.. அடுத்தடுத்து அழுத்தங்கள்.. ஊரடங்கை நீட்டிக்க இதுதான் காரணமா!
ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவுக்கு பின்னணி என்ன?
சென்னை: நச்சென சொல்ல வேண்டுமானால் ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் முக ஸ்டாலின் இவர்கள் இருவரும் மாறி மாறி தந்த அழுத்தம்தான் முதல்வரின் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்புக்கு காரணமாக அமைந்துவிட்டதாக பரபர பேச்சுக்கள் எழுந்துள்ளன.
Recommended Video
ஏற்கனவே பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு நாளைதான் முடிவுக்கு வருகிறது என்றாலும், இது நீட்டிக்கப்படுமா என்பது குறித்த கேள்வி போன வாரமே எழுந்துவிட்டது.. இதற்கு காரணம் இந்தியாவில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போவதால்தான்!
இதனால் அந்தந்த மாநில முதல்வர்களே லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.. அதுபோலவே நம் முதல்வரும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.. இது சம்பந்தமான முதல்வர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.

தமிழகம்
அந்த வகையில் கடந்த 3 நாட்களாகவே டென்ஷன் எகிறி கிடந்தது.. ஊரடங்கு நீட்டிப்பினை முதல்வர் அறிவிப்பாரா? பிரதமர் சொல்வாரா என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.. காரணம் பல மாநிலங்களில் நீட்டித்து அறிவித்து விட்டார்கள். தமிழகம் மட்டும் அறிவிக்காமல் இருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ மத்திய அரசு இது தொடர்பாக அறிவிக்கட்டும் என கூறியிருந்தார். இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

உத்தரவு
ஒரு கட்டத்தில் முக ஸ்டாலின் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா இல்லையா என்பதை தாமதமின்றி அறிவிக்க வேண்டும் ஒடிசா, பஞ்சாப் முதல்வர்கள் நீடித்துள்ள நிலையில் தமிழகத்தின் முடிவினை இனியும் காலதாமதம் செய்யாமல் எடுத்து, மக்களின் மனநிலையைத் தயாரித்திட முன்கூட்டியே அறிவித்திட வேண்டும்" என்று முதல்வருக்கு கடிதம் எழுதினார்.

அதிமுக
இதனிடையே ஆஸ்பத்திரிகளில் வென்டிலேட்டர்கள் பிரச்சனை முதல் செந்தில்பாலாஜி நிதியை பெற்று கொள்ளாதது வரை அனைத்தையும் ட்வீட் போட்டு கேள்வி கேட்டார் முக ஸ்டாலின்.. முதல்வரையும் கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார் ஸ்டாலின்... இது அதிமுக தரப்பை கொஞ்சம் அதிர்ச்சி அடையவே வைத்தது.

கமல்ஹாசன்
இன்னொரு பக்கம் ஒரு வாரமாகவே மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் பதிவுகளும் ட்வீட்களும் டெல்லியையே அலறவிட்டன.. இந்த சமயத்தில் பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் நாட்டில் எந்த கட்சி தலைவருக்கும் வராத நிலையில் கமல் மாறுபட்டு கருத்தை முன் வைத்திருந்தார்... பிரதமருக்கு எழுதிய ஓபன் லெட்டர் அதிமுகவையும் சற்று உற்று கவனிக்கப்பட வைத்தது. ஆளும் தரப்பே நிதியை பெற மத்திய அரசுக்கு போதுமான அழுத்தம் தரவில்லை என்ற அதிருப்தியை பெற்று வரும் நிலையில், கமல் இப்படி பொசுக்கென பிரதமரை கேள்வி கேட்பார் என்று யாரும் யோசித்து பார்க்கவில்லை.

எஜமானர்
மேலும் தடாலடியாக யூ-டர்ன் போட்டு அதிமுக பக்கமும் திரும்பினார் கமல்ஹாசன்.. "லாக்டவுன் நீட்டிப்பு குறித்து பிற மாநில முதல்வர்கள் அறிவித்துவிட்டனர்.. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் என் மாண்புமிகு முதல்வர் அவர்களே? உங்களது எஜமானரின் உத்தரவு குரலுக்காகவா காத்திருக்கிறீர்கள்? என்னுடைய குரல் மக்களிடம் இருந்து மக்களுக்காக வருகிறது" என்று கமல் பதிவிட்டது முற்றிலும் யாரும் எதிர்பாராதது!!

ட்விட்ர்வாசிகள்
"பிற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கான முடிவை தாங்களே எடுக்கும் நேரத்தில் தமிழக முதல்வர் அவ்வாறு எடுக்கவில்லை என ட்விட்டர் வாசிகள் கேள்விகளை எழுப்பினர்.. தன்னிச்சையாக எந்த முடிவையும் முதல்வரால் எடுக்க முடியவில்லையா என்றும், "மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிக்கை விடும் நேரத்தில் இன்று தமிழ்நாட்டில் தலைமை செயலர் அதை பிரதமர் மோடி அறிவிப்பார் என்றால் நீங்கள் யார் எடப்பாடி அவர்களே??" என்றும் காட்டமான கேள்விகளும் எழுந்தன.

அழுத்தங்கள்
இப்படி நாலாபக்கமும் நெருக்கடிகள், அழுத்தங்கள் எழுந்த நிலையில், திடீரென முதல்வர் தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.. பிரதமர்தான் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பார் என்று நாள்கணக்கில் காத்திருந்த நிலைமை உடைந்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஸ்டாலினும், கமலும்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்!!
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications