சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏங்க.. இதெல்லாம் பணக்காரர்களுக்கு வந்த நோய்தானுங்க.. ஏழைங்களுக்கு எங்கே நோய் வந்தது? முதல்வர் அதிரடி

கொரோனாவைரஸ் பரவல் குறித்து முதல்வர் எடப்பாடியார் கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "ஏங்க.. இதெல்லாம் பணக்காரர்களுக்கு வந்த நோய்தானுங்க.. ஏழைங்களுக்கு எங்கே நோய் வந்தது? வெளிநாடு, வெளிமாநிலம் போய்ட்டு வந்து இங்கே கொண்டு வந்து விட்டுட்டாங்க.. ஏழைகள் கிட்ட தாராளமா பேசலாம்.. பணக்காரங்கள கண்டால்தான் பயமா இருக்குது.. தமிழகத்தில் இந்த நோய் உருவாகலையே" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இன்னும் 3 நாட்கள்தான்.. கொரோனா சுத்தமாக காலி

    ஊரடங்கு அமலில் இருப்பது தொடர்பாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    coronavirus: cm edapadi palanisamy says about coronavirus spread

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கொரோனா தடுப்பு குறித்த தமிழக அரசின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் விலாவாரியாக எடுத்து கூறினார். முதல்வர் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

    "நீங்க செய்தி சேகரிக்க போறீங்க.. அப்படி செய்தி சேகரிக்க போகும்போது உங்களுக்கு ஏதாவது, (எதுவும் வரக்கூடாது, ஆண்டவனை வேண்டிக்கிறேன்.. நீங்கல்லாம் மக்களுக்கு ஊடகத்தின் வாயிலாக நல்ல செய்திகளை குடுத்துட்டு இருக்கீங்க..) தொற்று நோய் வந்தால், உங்களுடைய செலவையும் அரசே ஏற்கும்.. முழு செலவையும் ஏற்று கொள்ளும்.

    அது மட்டுமில்லை.. அந்த நோயின் தன்மை முற்றிப்போய் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேரிட்டால் அந்த பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் எங்கள் அரசு துணை நிற்கும்.. ஆனால் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் பதிவு செய்யப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் உயிரிழப்பு ஏற்பட்டால் அரசு 5 லட்சம் ரூபாய் வழங்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதாகவும், இதன் எண்ணிக்கை இன்னும் 2, நாளில் குறைந்துவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்த முதல்வர் தொடர்ந்து பேசும்போது, "ஏங்க.. இதெல்லாம் பணக்காரர்களுக்கு வந்த நோய்தான்.. ஏழைங்களுக்கு எங்கே வந்தது? அவங்கதான் கொண்டு வந்து விட்டுட்டாங்க.. வெளிநாட்டில் இருந்து, வெளிமாநிலத்தில இருந்து கொண்டு இறக்குமதி ஆன நோய்தானே.. ஏழைகளுக்கு நோயே கிடையாது.

    ஏழைகள் கிட்ட தாராளமா பேசலாம்.. பணக்காரங்கள கண்டால்தான் பயமா இருக்குது.. ஏன்னா, வெளிநாடுகளுக்கு போய்ட்டு வந்து நோயை இறக்குமதி பண்ணிட்டு இருக்காங்க.. அதேமாதிரி வெளிமாநிலத்துக்கும் பலபேர் போய்ட்டு வந்து, இங்க அந்த நோய் ஏற்பட்டிருக்கு.. இதனாலதான் நோய் வந்திருக்கே தவிர தமிழகத்தில் இந்த நோய் உருவாகலையே" என்றார்.

    English summary
    coronavirus: cm edapadi palanisamy says about coronavirus spread
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X