"பெருமாள்" கொரோனா அவதாரம் எடுத்துட்டாராம்.. கலிகாலம் ஆரம்பிச்சுடுச்சாம்.. சொல்கிறார் டாக்டர் கமலா!
கல்கி கொரோனா அவதாரம் எடுத்துவிட்டதாக கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்
சென்னை: "பெருமாளின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்திற்கு பதிலாக கொரோனா அவதாரம் எடுத்துள்ளார்.. கலிகாலம் ஆரம்பிச்சிடுச்சு... முருகன் காலடியில் உள்ள பாம்பை மனுஷன் எப்போ சாப்பிடுகிறானோ அப்பவே அவனுக்கு அழிவுதான் என்று ஒரு சித்தர் சொல்லியிருந்தார்.. இனிமேல்தான் பூகம்பம் வெடிக்க போகுது.. கடவுள்தான் காப்பாத்தணும்"" என்று டாக்டர் கமலா செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல டாக்டரும் நடிகர் ஜெமினி கணேசன் மகளுமான கமலா செல்வராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:

"வணக்கம்.. நான் டாக்டர் கமலா செல்வராஜ் பேசறேன்.. இப்போ கலிகாலம் போல இருக்கு.. பெருமாளின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்திற்கு பதிலாக கொரோனா அவதாரம் எடுத்துள்ளார்.. கலிகாலம் ஆரம்பித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.... 400 வருஷத்துக்கு முன்னாடியே ஒரு சித்தர் சொல்லி இருக்கார்.. முருகன் காலடியில் உள்ள பாம்பை மனுஷன் எப்போ சாப்பிடுகிறானோ அப்பவே அவனுக்கு அழிவுதான் என்று... இது நிஜம்தான் போல இருக்கு.
சீனாவில் கொரோனா ஆரம்பிச்சி அங்கே கன்ட்ரோல்ல வந்துட்டாங்க.. ரஷ்யாவில் ஜனவரியில வந்தவுடனே அவங்களும் கன்ட்ரோல்ல வந்துட்டாங்க.. நம்ம அரசாங்கம் நிறைய பண்றாங்க.. இருந்தாலும் மத்த நாடுகளில் இருந்து வர்றவர்களை இந்தியர்கள் என்று கூறி உள்ளே விட்டது ரொம்ப தப்பு... ஏர்போர்ட்டிலேயே அவங்களை 2 வாரங்கள் தனிமைப்படுத்தி அதுக்கப்பறம் அனுப்பியிருக்கணும்.
வெறும் சளி, காய்ச்சல் டெஸ்ட் மட்டும் எடுத்துவிட்டு உள்ளே விட்டுட்டாங்க.. அப்படி விட்டதால்தான் இந்த விபரீதம்... இனிமேல் தான் எல்லாமே பூகம்பம் வெடிக்கும். என்ன பண்ண போகிறோம் என்று தெரியலை.... இனிமேல் கடவுள்தான் காப்பாத்தணும்" என்று டாக்டர் கமலா செல்வராஜ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications