டிஸ்சார்ஜ் முதல் கொரோனா கண்டெயின்மெண்ட் வரை.. தமிழகத்திற்கு ஒரே நாளில் 4 நல்ல செய்தி.. செம!
கொரோனா பரவலுக்கு இடையே தமிழகத்திற்கு ஒரே நாளில் நான்கு நல்ல செய்திகள் கிடைத்து உள்ளது.
சென்னை: நாடு முழுக்க தீவிரமான கொரோனா பரவலுக்கு இடையே தமிழகத்திற்கு ஒரே நாளில் நான்கு நல்ல செய்திகள் கிடைத்து உள்ளது.
Recommended Video
இந்தியாவில் நாடு முழுக்க 28,215 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இதுவரை 887 பேர் பலியாகி உள்ளனர். இன்று தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1937 பேருக்கு மொத்தமாக இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. அதிகமாக சென்னையில் இன்று 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 570 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

முதல் நல்ல செய்தி
தமிழகத்தில் முதல் நல்ல செய்தி என்றால், அது இன்று இறப்பு ஒன்றும் இல்லை என்பதுதான். தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தினமும் ஒருவர் அல்லது இருவர் என்ற விகிதத்தில் மரணம் அடைந்து வந்தனர். அதிலும் இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் 35 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கூட பலியானார். ஆனால் 3 நாட்களுக்கு பிறகு இன்று தமிழகத்தில் யாருமே பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நல்ல செய்தி
தமிழகத்தில் அடுத்த நல்ல செய்தி என்றால் இன்று ஒரே நாளில் மொத்தம் 7176 சாம்பிள்கள் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 94871 சாம்பிள்கள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 41 கொரோனா சோதனை மையங்கள் உள்ளது. இந்தியாவில் தினமும் அதிக கொரோனா சோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. நாளை தமிழகம் 1 லட்சம் என்ற எண்ணிக்கையை தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற மாநிலங்கள் எப்படி?
அதேபோல் மூன்றாவது நல்ல செய்தி என்றால் தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் இன்று 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் மதுரையில் 79 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்தில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் எல்லாம் கொரோனா பெரிய அளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

செம செய்தி
நாளுக்கு நாள் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டெயின்மெண்ட் பிளான் பெரிய அளவில் பலன் அளித்துள்ளது. முக்கியமாக கடுமையாக ஊரடங்கு பெரிய அளவில் பலன் அளித்துள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகம் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக அளவில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
தமிழகத்தில் எப்போதும் போல இன்றும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 81 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,101ஆக உயர்ந்துள்ளது. தமிழ்கத்தில் சராசரியாக குணமடையும் நபர்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டி உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 809 மட்டுமே ஆகும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications