• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொரோனா ரணகளத்திலும் நெட்டிசன்களுக்கு பெருந்தீனிபோடும் எச். ராஜாவின் ரூ10,000 ட்வீட்

|

சென்னை: கொரோனாவின் கொடூர தாக்கத்தில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நெட்டிசன்களுக்கு பொழுதுபோக்கும் வகையில் ட்வீட் போட்டு வைத்திருக்கிறார் பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா.

சமூக வலைதளங்களில் எச்.ராஜா எதை பதிவிட்டாலும் ஒரு பெருங்கூட்டமே கூடி கும்மி அடித்துவிட்டுதான் ஓயும். அதுவும் அட்மின் விவகாரத்துக்குப் பிறகு எச். ராஜாவை விமர்சித்திப்பதாக நினைத்துக் கொண்டு அட்மினுக்குத்தான் வசவுகள் ஏராளம்.

Coronavirus: H Raja tweet creats controversy

தற்போது கொரோனாவால் லாக்டவுன் அமலாக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் லாக்டவுன் தீவிரமாக அமல் செய்யப்பட்டு வருவதால் நெட்டிசன்கள் பொழுது போக்குக்கு தீனி தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் எச். ராஜா இன்று போட்ட ஒரு ட்வீட், சும்மா கிடந்த நெட்டிசன்களுக்குக்கு பெருந்தீனியாகிவிட்டது. எச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஓதுவார், இசை கலைஞர்கள், ஆகியோருக்கு மாதம் 10000 ரூபாய் வரும் 3 மாதங்களுக்கு அறநிலையத்துறை வழங்கிட வேண்டும். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று போட்டிருக்கிறார். ஆம் ரூ10,000 நிதி உதவி வழங்க வேண்டும் என்பதுதான் எச். ராஜாவின் கோரிக்கை.

அப்புறம் என்ன ஸ்டார்ட் மியூசிக்தான்.. @IWRYwetyJ7SAsaI என்ற நெட்டிசன், போதுமா ..மாதம் 10,000 ஆயிரம். கொஞ்சம் கூடுதலா கேளுங்க சார். மாத வருமானம் லட்சத்தில் உள்ள இடத்தில் வெறும் 10 ஆயிரம் கேட்குறீங்க என பொங்கி இருக்கிறார்.

@jeyaseelanj என்பவர் திரு @HRajaBJP அவர்கள் உலகிலேயே மிக பணக்கார கட்சியான பாஐக கட்சி அக்கவுண்டுல இருந்து மாதம் 10000 ரூபாய் வழங்கிடுவார். என கிண்டலடித்திருக்கிறார்.

  சொந்த ஊருக்கு அனுப்புங்கள்.. பணம், உணவில்லாமல் குழந்தைகளுடன் கதறும் வடமாநிலத்தவர்கள் - வீடியோ

  அனல் பறக்கிறது அங்கே!

  பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  BJP National Secretary H Raja tweet has created new controversy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more