4 அடுக்கு பாதுகாப்பு வளையம்.. தமிழ்நாட்டில் சர்ரென உயர்ந்த ஓமிக்ரான்.. ராதாகிருஷ்ணன் முக்கிய தகவல்!
சென்னை: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட நபர்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 33 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. கடந்த 1 வாரம் முன் ஜீன் சோதனைக்காக 57 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டன. அதில் ஒருவருக்கு ஏற்கனவே ஓமிக்ரான் உறுதியானது.
இன்று 33 பேருக்கு கூடுதலாக உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் 54 பேருக்கும், டெல்லியில் 57 பேருக்கும் ஓமிக்ரான் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் திடீரென ஓமிக்ரான் உயர்ந்தது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன்
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் ஏற்கனவே கட்டுப்பாட்டு பணிகள் தொடங்கிவிட்டன. அதிகம் கேஸ் பரவ வாய்ப்பு உள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். விமான நிலையத்திலேயே சோதனை செய்து அங்கேயே கட்டுப்பாடுகளை தொடங்கிவிடுகிறோம். அதன்பின் காண்டாக்ட்ஸ்களை சோதனை செய்கிறோம்.

ஓமிக்ரான் டாக்டர் ராதாகிருஷ்ணன்
4700க்கும் அதிகமான காண்டாக்ட்ஸ்களை சோதனை செய்து உள்ளோம். இதில் 57 பேருக்கு ஜீன் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில்தான் 34 பேருக்கு ஓமிக்ரான் வந்துள்ளது. இன்னும் 23 பேருக்கு ஜீன் முடிவுகள் வர வேண்டும். இவர்கள் எல்லோரும் 4 அடுக்கு பாதுகாப்பில் உள்ளனர்.

தமிழ்நாடு ஓமிக்ரான்
4 அடுக்கு பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளது. எங்கெல்லாம் சூப்பர் ஸ்ப்ரெட் நடக்க வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். கூடுதலாக கண்காணிக்க சொல்லி இருக்கிறோம். உடனடியாக கண்டுபிடித்து தனிமைப்படுத்தி வருகிறோம்.
Recommended Video

அச்சம் வேண்டாம்
இதனால் எல்லோரும் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். எஸ் ஜீன் டிராப் கண்டறியப்பட்டதும் ஜீன் சோதனைக்கு அனுப்பிவிடுகிறோம். உடனே அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என்பதால் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது, டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications