பெரும் பின்னடைவு.. வெளியான புள்ளி விவரம்.. தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது?

தமிழகத்தில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளும் அதற்கான பதில்களும் | Dr.Aravindha Raj

    இந்தியாவில் இதுவரைய 467 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 9 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். புதிதாக இன்று மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசத்தில் ஒருவர் பலியானார்கள்.

    தமிழகத்தில் இதுவரை மொத்தம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பி இருக்கிறார்.

    நிலைமை என்ன

    நிலைமை என்ன

    தமிழகத்தில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 209035 பயணிகள் விமான நிலையம், ரயில் நிலையங்களில் சோதனைக்கு உள்ளாகி உள்ளனர்.மொத்தமாக 12,519 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

    மொத்தம் எத்தனை பேர்

    மொத்தம் எத்தனை பேர்

    மொத்தம் 89 பேர் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 552 பேருக்கு ரத்த பரிசோதனை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 503 பேருக்கு நெகட்டிவ் என்றும், 9 பேருக்கு பாசிட்டிவ் என்றும் முடிவு வந்துள்ளது, 40 பேருக்கு முடிவு வெளியாகவில்லை. அதன்படி சென்னையில் 3600 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி நிலை

    கன்னியாகுமரி நிலை

    கன்னியாகுமரியில் 1044 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தஞ்சாவூரில் 775 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கோயம்புத்தூரில் 512 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் 493 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சியில் 492 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிவகங்கையில் 481 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடலூர் நிலை என்ன

    கடலூர் நிலை என்ன

    கடலூரில் 463 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.திருவாரூரில் 393 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.திருநெல்வேலியில் 384 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரத்தில் 343 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாகப்பட்டினத்தில் 325 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.மதுரையில் 325 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    கேரளாவில் எப்படி

    கேரளாவில் எப்படி

    கேரளாவில் இதுவரை மொத்தம் 4035 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு 92 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 2744 பேருக்கு கொரோனா இல்லை. மீதி உள்ளவர்களுக்கு இன்னும் சோதனை முடிவு வெளியே வரவில்லை.கர்நாடகாவில் 1387 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சோதனை முடிவு இல்லை

    சோதனை முடிவு இல்லை

    1108 பேருக்கு கொரோனா இல்லை. மீதி உள்ளவர்களுக்கு இன்னும் சோதனை முடிவு வெளியே வரவில்லை. மகாராஷ்டிராவில் 2501 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அங்கு 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1700 பேருக்கு கொரோனா இல்லை. மீதி உள்ளவர்களுக்கு இன்னும் சோதனை முடிவு வெளியே வரவில்லை.

    தமிழகம் நிலை என்ன

    தமிழகம் நிலை என்ன

    இந்த மூன்று மாநிலங்களிலும் 1000க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 600க்கும் குறைவான நபர்களுக்குத்தான் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைவான நபர்களுக்குத்தான் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதை இன்னும் வேகமாக துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+