தமிழ்நாட்டில் பதிவானது ஓமிக்ரான் கொரோனா.. உள்ளே வந்தது எப்படி? எத்தனை பேர் காண்டாக்ட்? முழு விபரம்!
சென்னை: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது குறித்த விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது. சென்னையை சேர்ந்தவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது.
வேகமாக கேஸ்கள் அதிகரித்த நிலையில் இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை
தமிழ்நாட்டில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதில், ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லேசான அறிகுறிகளே உள்ளது. அவர் நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்துள்ளார். அவருக்கு சோதனை செய்யப்பட்டதில் ஓமிக்ரான் உறுதியானது.

தொடர்பு
அவருடன் தொடர்பில் 8 பேர் இருந்துள்ளனர். அதில் ஒரு குழந்தை. இவர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இதுவரை தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஜீன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இரண்டு டோஸ்
சென்னையில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட அந்த நபர் இரண்டு டோஸ் போட்டுள்ளார். இதனால் அவருக்கு லேசான அறிகுறியே உள்ளது. எனவே மக்கள் இதை பற்றி அச்சப்பட கூடாது. மாறாக மக்கள் தொடர்ந்து வேக்சின் போட வேண்டும். அதுவே ஓமிக்ரான் பரவலை தடுக்கும்.

டிரேசிங்
அதேபோல் அந்த நபருடன் விமானத்தில் வந்தவர்கள் டிரேஸ் செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. மக்கள் அச்சப்பட வேண்டாம், என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications