4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை.. அதீத கவனம்.. கொரோனாவால் பலியானவர் உடலை என்ன செய்ய வேண்டும்?

கொரோனா வைரஸால் பலியானவர்களின் உடலை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை நிறைய அறிவுரைகளை வழங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸால் பலியானவர்களின் உடலை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை நிறைய அறிவுரைகளை வழங்கி உள்ளது.

Recommended Video

    Covid-19 Chennai's Public Opinion | வாழ ஆசையே இல்ல... கொரோனாவே வந்திட்டு போகட்டும்..

    உலகம் முழுக்க 198556 பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் எண்ணிக்கை இன்று இரண்டு லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 153 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. உலகம் முழுக்க 7987 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸால் ஒருவர் பலியானால் அவருக்கு எப்படி இருசடங்கு செய்ய வேண்டும், அவரின் உடலை எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இதற்கான அறிவுரைகளை வழங்கி உள்ளது.

    வைரஸ்

    வைரஸ்

    அதன்படி முதல்கட்டமாக ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக பலியானால் அவரின் உடலை தனிப்படுத்த வேண்டும். இவரின் உடலை கையாளும் மருத்துவர்கள், பணியாளர்கள் எல்லோரும் இதற்காக முறையாக பயிற்சி பெற்று இருக்க வேண்டும். அதன்பின் தான் உடலை அங்கிருந்த அகற்ற வேண்டும். உடலை அகற்றும் முன் பணியாளர்கள் தங்கள் உடலை பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் பாதுகாக்க வேண்டும்.

    தண்ணீர் எப்படி

    தண்ணீர் எப்படி

    அதன்படி தண்ணீர் நுழையாத கோட், கிருமிகள் நுழையாத கண்ணாடி, என்95 மாஸ்க், கிளவுஸ் ஆகியவை பயன்படுத்த வேண்டும். பலியானவர் உடலில் இருந்து அனைத்து குழாய் போன்ற உறுப்புகளும் நீக்கப்பட வேண்டும். அவரின் உடலில் இருக்கும் அணைத்து துளைகளும் மூடப்பட வேண்டும். உடலில் உள்ள காயங்கள் உட்பட செயற்கையான துளைகளும் இருந்தாலும் அது கிருமிகள் நீக்கப்பட்டு இறுக்கமாக கட்டப்பட வேண்டும்.

    கருவிகள்

    கருவிகள்

    அதேபோல் நரம்புகளை நீக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ கருவிகளை இரும்பு பெட்டியில் போட்டு புதைக்க வேண்டும். அதை மீண்டும் பயன்படுத்த கூடாது. அதேபோல் உடலில் இருந்து திரவங்கள் வெளியாக வாய்ப்பு உள்ள நாசி, மூச்சு குழல் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் நீக்கப்பட்டு அடைக்கப்பட வேண்டும். பலியானவரின் உடலை உறவினர்கள் பார்க்க விரும்பினால், அதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை உடன் அவர்களை அனுமதிக்க வேண்டும்.

    என்ன தூரம்

    என்ன தூரம்

    ஆனால் இதற்கு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல மட்டுமே அனுமதிக்க வேண்டும். எந்த விதமான கசிவும் ஏற்படாத பிளாஸ்டிக் பேக்கில் இந்த உடலை வைக்க வேண்டும். இந்த பேக்கை 1% ஹைபோ குளோரைட் கொண்டு பாதுகாக்க வேண்டும். பலியானவருக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட அனைத்து கருவிகளும் சுத்தம் செய்யப்பட்டு பின் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

    கழுவ வேண்டும்

    கழுவ வேண்டும்

    பலியானார் இருந்த இடம், சிகிச்சை பெற்ற இடம் மொத்தம் 1% சோடியம் ஹைபோகுளோரைட் கொண்டு சுத்தப்ப்டுத்தப்பட வேண்டும். 30 நிமிஷம் சூடான நீரில் இந்த இடத்தை கழுவ வேண்டும். சவ கிடங்கில் இந்த உடலை மிகவும் பாதுகாப்போடு கையாள வேண்டும். இந்த உடலை சவக்கிடங்கில் 4°C வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதேபோல் அங்கிருந்து உடலை அகற்றிய பின் பலியானார் இருந்த இடம், சிகிச்சை பெற்ற இடம் மொத்தம் 1% சோடியம் ஹைபோகுளோரைட் கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்

    செய்ய கூடாது

    செய்ய கூடாது

    பலியானோர் உடலை எந்த காரணம் கொண்டும் எம்பால்மிங் செய்ய கூடாது. இவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்யவும் நிறைய வரையறைகள் உள்ளது. அதன்படி இவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கூடாது. அப்படியே உடலை கண்டிப்பாக பிரேத பரிசோதனைசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மிகவும் கவனமாக, அதிக அனுபவம் கொண்டவர்களை வைத்து செய்ய வேண்டும்.

    கோட் எப்படி

    கோட் எப்படி

    இந்த பணியை செய்யும் நபர்கள் தண்ணீர் நுழையாத கோட், கிருமிகள் நுழையாத கண்ணாடி, என்95 மாஸ்க், கிளவுஸ் ஆகியவை பயன்படுத்த வேண்டும். அதேபோல் இந்த அறைக்குள் மைனஸ் அறை அழுத்தம் இருக்க வேண்டும். எல்லா பணிகளையும் முடித்த பின் உடலை 1% சோடியம் ஹைபோகுளோரைட் கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும். அதன்பின் மொத்தமாக மூடப்பட்ட பையில் இந்த உடலை வைத்து அப்புறப்படுத்த வேண்டும்.

    என்ன வாகனம்

    என்ன வாகனம்

    இந்த உடலை அப்புறப்படுத்த பயன்படுத்தப்பட்டு வாகனமும் இதே முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டும். உடலை புதைக்கலாம். அதே சமயம் உடலை எரிப்பது நல்லதாக இருக்கும். கடைசியாக உடலை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி தரலாம். ஆனால் தூரத்தில் வைத்துதான் உடலை காட்ட வேண்டும். சில நொடிகள் மட்டுமே பேக்கை திறக்க வேண்டும். மத ரீதியான சம்பிரதாயங்களை செய்யலாம்.

    கூடவே கூடாது விஷயம்

    கூடவே கூடாது விஷயம்

    ஆனால் பலியானவர் உடலை எக்காரணம் கொண்டும் தொட கூடாது. நெருக்க கூடாது. கூட்டமாக உறவினர்கள் வர கூடாது. உடலை எரித்த அல்லது புதைத்த பின்னர் மொத்தமாக எல்லோரும் 1% சோடியம் ஹைபோகுளோரைட் மூலம் கைகளை கழுவ வேண்டும். கிருமி நாசினிகள் மூலம் முகத்தை கழுவ வேண்டும். அதன்பின் எல்லோரும் குளிக்க வேண்டும். இந்த சாம்பலில் வைரஸ் பரவ வாய்ப்பில்லை. அதனால் இறுதி சடங்கிற்கு பின் அதை காரியம் செய்ய எடுத்து செல்லலாம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+