தோல், உதடு, நகம்.. இந்த ஓமிக்ரான் அறிகுறி இருந்தா உடனே டாக்டர் கிட்ட போங்க.. வல்லுநர்கள் அறிவுரை!
சென்னை: ஓமிக்ரான் பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு தோன்ற கூடிய முக்கியமான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஓமிக்ரான் பரவல் உலகம் முழுக்க மிக தீவிரமாக பரவி வருகிறது. இதில் 32 உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் அறிகுறிகள் பல மாற்றம் அடைந்துள்ளது. டெல்டாவை விட வேகமாக பரவினாலும் டெல்டா அளவிற்கு இது ஆபத்து கொண்டதாக இதுவரை இல்லை.
தலைவலி, இருமல், மூக்கில் சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல் , லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகள் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.

புதிய அறிகுறிகள்
பொதுவாக இருக்கும் இந்த அறிகுறிகள் தவிர பல புதிய அறிகுறிகள் கடந்த சில நாட்களாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஓமிக்ரான் ஏற்படும் நபர்களுக்கு வாந்தி மற்றும் பசியின்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. The ZOE என்று கொரோனா சோதனை அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த இரண்டு புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் வேறு சிலவிதமான ஓமிக்ரான் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று சிடிசி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் அறிகுறி
இது தொடர்பாக அமெரிக்காவில் நோய் கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி முக்கிய அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஓமிக்ரான் ஏற்படும் நபர்களுக்கு தோல், உதடு, நகத்தில் சில அறிகுறிகள் தோன்றலாம். தோல் வெளுத்து போகும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு தோல் நீல நிறத்திற்கு மாறும் வாய்ப்புகளும் உள்ளது. அதேபோல் உதடு, நகம் ஆகியவையும் வெளுத்து போகவோ, நீல நிறத்திற்கு மாறவோ வாய்ப்பு உள்ளது.

நிறம் மாறும்
உங்கள் நிறத்தை பொறுத்து இந்த மாற்றம் அமையும். வெள்ளை தோல் கொண்டவர்களுக்கு நீல நிறத்தில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கருப்பு தோல் கொண்டவர்களுக்கு வெளுத்து போக வாய்ப்புகள் உள்ளது. குறைந்த அளவிலான ஆக்சிஜன் ரத்தத்தில் இருப்பதால் இந்த மாற்றம் உடலில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஓமிக்ரான் அறிகுறி ஏற்பட்ட பின் இந்த அறிகுறிகள் வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஆக்சிஜன்
உடலில் ஆக்சிஜன் குறைந்துவிட்டது என்பது காட்டும் எச்சரிக்கை மணி இது. இந்த அறிகுறி வந்தால் மட்டும் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உடலில் ஆக்சிஜன் குறையும் போது சமயங்களில் அது மூச்சு சுவாசத்தில் தெரியாது. இது போன்ற அறிகுறி மூலம் தெரியும். அந்த மாதிரியான சமயத்தில் அலட்சியமாக இருந்துவிட கூடாது.
Recommended Video

உடனே மருத்துவரை அணுகுங்கள்
ஓமிக்ரான் பாதித்த பலருக்கு சுவாச பிரச்சனை வருவது இல்லை. இது இருதயத்தை பெரிய அளவில் பாதிக்கவில்லை. வெகு சிலருக்கு மட்டுமே லேசான மூச்சு பிரச்சனை ஏற்படுகிறது. சிலருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்படுகிறது. மனக்குழப்பம், உறக்கத்தில் சிக்கல் போன்ற அறிகுறிகளும் ஓமிக்ரான் நோயாளிகளிடம் ஏற்படுகிறது என்று அமெரிக்காவில் நோய் கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி தெரிவித்துள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications