Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒன்றரை வயது ஆண் குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலில் 91 காயங்கள் இருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்த நிலையில், குழந்தையின் தாய் மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் மோகத்தில் அநியாயமாக ஏதும் அறியா குழந்தை துடிக்க துடிக்க உயிரிழந்தது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த விவரங்களை காணலாம்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் அகிலா. இவருக்கு ஒன்றரை வயதில் அர்ஷி என்ற ஆண் குழந்தை உள்ளது. தனது மகனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினார்.

குழந்தை உடலில் 91 காயங்கள்
குழந்தை சாப்பிடும் போது உணவு தொண்டையில் சிக்கியதாகவும் இதனால் மயக்கம் அடைந்துவிட்டதாகவும் அகிலா கூறினார். ஆனால் குழந்தை இறந்துவிட்டதை உறுதி செய்த மருத்துவர்கள், உடலில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதனால் சந்தேகம் வரவே, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் விசாரணையை தொடங்கினர். பிரேத பரிசோதனையும் குழந்தையின் மரணம் காயத்தினால் ஏற்பட்டது தெரியவந்தது. உடலில் 91 காயங்கள், தழும்புகள் கண்டறியப்பட்டன.
குழந்தையின் கைகள் உடைக்கப்பட்டதும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதும் கண்டைறியப்பட்டது. உடலில் சிகரெட் சூடு வைக்கப்பட்டதையும் பார்த்த போலீசார், குழந்தை கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து தாய் அகிலாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளிவந்தன.
கள்ளக்காதல் மோகத்தில் கொடூரம்
அதாவது, அகிலாவுக்கும் அதே அஸ்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. டிரைவரான அஸ்கருடன் நெருங்கி பழக ஆரம்பித்த அகிலா, ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி போல ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளனர். அகிலாவின் இந்த செயல் அவரது தாய்க்கு பிடிக்கவில்லையாம். இதனால், குழந்தையை அகிலாவின் தாய் பராமரித்து வந்து இருக்கிறார்.
சில மாதங்கள் கழித்து அகிலா, தனது குழந்தையை அழைத்து வந்து இருக்கிறார். அகிலாவின் ஆண் நண்பரான அஸ்கர், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை அறிந்த அர்ஷித்தின் பாட்டி, குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசில் புகாரளித்து இருக்கிறார். இதற்கு மத்தியில், குழந்தை அர்ஷித் சாப்பிடும் போது அழுதுள்ளான்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொடூரன் அஸ்கர், குழ்ந்தையை தூக்கி சுவற்றில் வீசியதோடு, சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரால் சூடு வைத்து இருக்கிறான். இந்த கொடூரத்தால் படுகாயம் அடைந்த குழந்தை உயிரிழந்தது.. பெற்ற தாயோ கள்ளக்காதல் மோகத்தில் ஆண் நண்பரை காப்பாற்ற நாடகமாடியுள்ளார். மேலும் குற்றத்தை மறைக்க வீட்டில் இருந்த ரத்தக் கறைகளைக் கழுவி, குழந்தையின் துணிகளையும் அஷ்கருடன் சேர்ந்து எரித்து இருக்கிறார் அகிலா.
குழந்தை கொலை செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களையும் அவர்கள் இருவரும் சேர்ந்து அழிக்க முயன்று இருக்கிறார்கள். ஆனால் போலீஸ் விசாரணையில் கையும் களவுமாக சிக்கி தற்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்..
சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்
கேரளாவையே இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. குழந்தை என்றும் பாராமல் கொடூர செயலில் ஈடுபட்ட அஸ்கருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் ஆவேசமாக கூறி வருகிறார்கள். இதற்கிடையே, அஷ்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அஷ்கரை சரமாரியாக அடித்தனர்.
அதேபோல அஷ்கரின் காரையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால், போலீசாரும் குவிக்கப்பட்டனர். கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்று கேரள அரசும் உறுதியளித்துள்ளது.












Click it and Unblock the Notifications