சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்னிந்தியாவில் தமிழகத்தின் நிலைதான் பரிதாபம்.. சென்னை மிக மோசம்.. அதிர்ச்சி தரும் கொரோனா டேட்டா!

தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தை குழப்பும் கொரோனா பேட்டர்ன்... என்ன காரணம்?

    இந்தியாவில் இருக்கும் 5 தென்னிந்திய மாநிலங்கள் எப்போதும் மற்ற மாநிலங்களை விட அதிகம் முன்னேறிய மாநிலங்கள் ஆகும். தமிழகம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள்தான் இந்தியாவில் இப்போதும் வளர்ந்த மாநிலங்களாக, முன்னோடி மாநிலங்களாக உள்ளது.

    இந்த நிலையில் இந்த மாநிலங்களில் கொரோனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் இப்போதுதான் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 1583 பேருக்கு கொரோனா உள்ளது. அங்கு மொத்தமாக 33 பேர் பலியாகி உள்ளனர். கடைசியாக 24 மணி நேரத்தில் அங்கு 112 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதிக கொரோனா கேஸ்கள் கொண்ட மாநிலத்தில் ஆந்திர பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆந்திர பிரதேசத்தல் குர்நூல் மாவட்டத்தில் 466 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 10 பேர் பலியாகி உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம்

    தெலுங்கானா மாநிலம்

    தெலுங்கானா தென்னிந்தியாவில் அதிக கொரோனா கேஸ்களோடு மூன்றாம் இடத்தில் உள்ளது. மொத்தமாக 1061 கேஸ்கள் தென்னிந்தியாவில் தெலுங்கானாவில் மட்டும் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 29 பேர் பலியாகி உள்ளனர். ஹைதராபாத்தில் மட்டும் 565 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் இந்த பட்டியலில் கர்நாடகா நான்காம் இடம் வகிக்கிறது. அங்கு 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கர்நாடகா நிலை

    கர்நாடகா நிலை

    கர்நாடகாவில் மொத்தம் 25 பேர் பலியாகி உள்ளனர். பெங்களூர் சிட்டியில் 145 பேருக்கு கொரோனா உள்ளது. ஆனால் கர்நாடகாவில் தினமும் 2000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும். கேரளாவில் மொத்தமாக 500 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு 400 பேர் குணமாகி விட்டனர். 4 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 96 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.

    கேரளா நிலை என்ன

    கேரளா நிலை என்ன

    கேரளாவில் தென்னிந்தியாவில் குறைவான பலி எண்ணிக்கை, பலி சதவிகிதம், அதிக டிஸ்சார்ஜ் சதவிகிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா கொரோனா கிராஃபை மொத்தமாக மட்டுப்படுத்தி உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் தமிழகம்தான் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தமிழகம் நிலை

    தமிழகம் நிலை

    தென்னிந்தியாவில் தினமும் தமிழகத்தில்தான் அதிக கேஸ்கள் ஏற்படுகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 231 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 2757 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் 28ம் தேதி 121 கேஸ்கள், ஏப்ரல் 29ம் தேதி 104 கேஸ்கள், ஏப்ரல் 30ம் தேதி 161 கேஸ்கள், மே 1ம் தேதி 203 கேஸ்கள், மே 2ம் தேதி 231 கேஸ்கள் என்று வேகமாக எப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனா வேகம் எடுக்க தொடங்கியது.

    காரணம்

    காரணம்

    மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடம் போது தமிழகடத்தில்தான் அதிக கேஸ்கள் இருக்கிறது. அதே சமயம் சென்னையில் நேற்று அதிகளவாக சென்னையில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் 1260 பேருக்கு கொரோனா உள்ளது. சென்னையில் 17 பேர் பலியாகி உள்ளனர். தென்னிந்தியாவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மெட்ரோ நகரமாக சென்னை மாறியுள்ளது.

    கஷ்டம்

    கஷ்டம்

    ஒருவேளை தமிழகத்தில் மற்ற மாநிலங்களை அதிக அளவில் கொரோனா சோதனைகளை செய்வது இதற்கு காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் தற்போது தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்படுகிறது.139490 கொரோனா சோதனைகள் தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்டுள்ளது. இதுவும் கூட தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம் என்கிறார்கள். ஆனாலும் தமிழகம் இதை விரைவில் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

    English summary
    Coronavirus infection is very high in Tamilnadu than other southern states in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X