கடையைத் திறந்ததும்.. கும்பல் கும்பலாக வெளியில் சுற்றும் மக்கள்.. கொரோனாவை வலிய வரவழைக்கிறோமே!
சென்னை: லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் பல இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் பொதுமக்கள் எந்த வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இருப்பது கொரோனா வைரஸை நாமே வலிய வரவழைப்பதாகிவிடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
Recommended Video
லாக்டவுன் தளர்வுகள் என்பது ஏப்ரல் 20-ந் தேதி முதலே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் மே 3-ந் தேதி வரை முழுமையான லாக்டவுனை கடைபிடித்தன.
இந்த நிலையில் மத்திய அரசு மேலும் 2 வாரங்களுக்கு அதாவது மே 17-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டித்து அறிவித்துள்ளது. அதேநேரத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் பலவும் தளர்த்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மாநிலங்களிலும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் இல்லாமல் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் இயங்க தொடங்கி உள்ளன.

கட்டுப்பாடே இல்லை
ஆகையால் லாக்டவுன் காலம் முழுவதும் முடிந்துவிட்டதாக கருதி பொதுமக்கள் வழக்கம் போல நடமாடி வருகின்றனர். இதுவரை கடைபிடித்து வந்த தனிநபர் இடைவெளியையும் பின்பற்றுவது இல்லை; முக கவசமும் அணிவதில்லை; இதுவரை அணிந்ததேபோதும் என்கிற மனநிலையில் வலம் வருகின்றனர். உண்மையில் இந்த கால கட்டம்தான் மிக முக்கியமானது என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.

எச்சரிக்கை உணர்வு தேவை
லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்கிற எச்சரிக்கை உணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியமாகும். ஆகையால் முக கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை அனைத்து இடங்களிலும் பின்பற்றுவது என்பதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் கொரோனாவில் இருந்து தப்பிக்கவும் முடியும்.

கொத்தாக பரவும் அபாயம்
மின்கட்டணம் செலுத்த சென்றாலும் காய்கறி கடைகளுக்கு போனாலும் நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ள கட்டாயம் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள். உங்களுக்கும் பாதிப்பு வராமல் இருக்கும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் வராமல் இருக்கும். கொரோனா தொற்று என்பது தற்போது கொத்து கொத்தாக தொற்றி கொண்டு வருகிறது.

நம் செயல் நன்மை தரும்
சென்னையில் கோயம்பேடு சந்தைக்கு போன பல நூறு பேருக்கு இப்படித்தான் பரவி இருக்கிறது. இதனையும் நாம் ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொள்வதுதான் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் நன்மை தரக் கூடியதாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications