உங்கள் மாவட்டத்தில் என்ன நிலை.. மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை.. முக்கிய முடிவு?
தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடனே ஆலோசனை செய்து வருகிறார்.
சென்னை: தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடனே ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா தொடார்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
Recommended Video
யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது. ஏற்கனவே 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று மேலும் மூவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் தங்கி இருக்கும் தாய்லாந்தை சேர்ந்த இருவருக்கும், நியூசிலாந்தை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சென்னையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எப்படி நடவடிக்கை
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடனே ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா தொடார்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. சென்னையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக இந்த கண்காணிப்பு நடத்தப்பட்டது. கொரோனா தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் எடுத்து இருக்கும் நடவடிக்கை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது.

மருத்துவமனை
அந்தந்த மாவட்டங்களின் நிலையை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். மாவட்டங்களில் இருக்கும் எல்லா மருத்துவமனைகளையும் கண்காணிக்க இதில் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் அனுமதி ஆகும் எல்லோரையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நபர் எல்லா பணிகளையும் கவனிக்க முடியாது. அதனால் மாவட்ட ஆட்சியாளர்கள் இதில் தீவிரமாக களமிறங்கி பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் தூய்மை
முக்கியமாக கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. எல்லா மாவட்டத்திலும் உள்ள வெளிநாட்டினர் குறித்த லிஸ்ட் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூரில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், பொது இடங்களை உள்ளூரில் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.

வதந்தி தவறு
அதேபோல் வதந்தி பரப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வதந்திகளை கண்டுபிடிக்க குழு அமைக்க வேண்டும். வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களை கண்காணிக்க வேண்டும். தான மூலம் வதந்தி பரப்பும் நபர்களை கண்டுபிடிக்க வேண்டும். அதேபோல் மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications