குட் நியூஸ்.. அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா இல்லை.. அமைச்சர் தகவல்
சென்னை: அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கும் கொரோனா பாதித்துள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரின் மனைவிக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சீனாவையே பேய் போல் ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தற்போது அன்டார்டிகா தவிர்த்து ஏனைய கண்டங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
இந்த வைரஸ் சீனாவை விட 8 மடங்கு வேகமாக மற்ற நாடுகளில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது. இதனால் சாதாரண காய்ச்சல் என்றாலே மக்கள் அச்சம் கொண்டனர்.

கொரோனா
உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது தெரியவந்தது. இவர் ஓமன் நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் 12 ஆண்டுகளாக ஓமனில் பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து இவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா அறிகுறி
இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அங்கு நடந்த தெர்மல் சோதனையில் 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.

சிறுவனுக்கு
இந்த விமானம் அமெரிக்காவிலிருந்து கத்தாரில் உள்ள டோஹா விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அங்கு சில பயணிகளை ஏற்றிக் கொண்டு அதன் பின்னர் சென்னை வந்துள்ளது. அமெரிக்காவும் கத்தாரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகள் என்பதால் இந்த சிறுவனுக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
|
சோதனை முடிவுகள்
இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது அவரது ரத்த மாதிரியின் சோதனை முடிவுகளில் தெரியவந்தது. அது போல் ஓமன் நாட்டிலிருந்து வந்தவருக்கு கொரோனா இருந்த நிலையில் அவரது மனைவிக்கும் அந்த பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து அமைச்சர் சி விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் கூறுகையில் நற்செய்தி அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கும் கொரோனா பாதித்தவரின் மனைவிக்கும் வைரஸ் தாக்குதல் இல்லை. எனினும் இருவரையும் தமிழக சுகாதாரத் துறை கொடர்ந்து கண்காணித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications