1 ஓமிக்ரான்.. 12 சந்தேக கேஸ்கள்.. தமிழ்நாட்டில் மீண்டும் வருமா லாக்டவுன்? தயார் நிலையில் பெட்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே ஓமிக்ரான் கேஸ் பதிவாகி உள்ளது. அதேபோல் 8 ஓமிக்ரான் சந்தேக கொரோனா கேஸ்கள் உள்ளன. இந்த நிலையில் பரவலை தடுக்கும் வகையில் லாக்டவுன் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த ஒரு பயணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறியோடு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு எஸ். ஜீன் இல்லாத காரணத்தால் ஓமிக்ரான் இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேபோல் ஆரணி வந்த இன்னொரு வெளிநாட்டு பயணிக்கும் ஓமிக்ரான் அறிகுறி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போக மேலும் 4 பேர் இன்று ஓமிக்ரான் அறிகுறி உள்ள நோயாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தயார் நிலை
இதனால் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து உள்ளது. அதிக அளவில் ஓமிக்ரான் பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து மருத்துவ கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாஸ்க்
மக்கள் மாஸ்க் போடும் வழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்ட நிலையில்தான் இந்த பரவல் தொடங்கி உள்ளது. அதிலும் தமிழ்நாடு அரசு நிறைய கட்டுப்பாடுகளை தளர்ந்து வந்தது. மாணவ, மாணவியர் சுழற்சி அடைப்படையில் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கினர். அதேபோல் தியேட்டர் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் பெரிய அளவில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தியேட்டர்
தியேட்டர்களில் மட்டும் இரண்டு டோஸ் கட்டாயம் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற கட்டாய விதி அமலில் உள்ளது. ஆனால் இப்போது இருக்கும் விதிகளின்படி தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவலை தடுக்க முடியாது. இப்போது நிறைய தளர்வுகள் இருப்பதால் ஓமிக்ரான் பரவலை அவ்வளவு எளிதாக கட்டுக்குள் கொண்டு வர முடியாது.

கட்டாயம்
ஒருவேளை தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்தால் உடனே கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் வரும் நபர்களுக்கு இ பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கண்டிப்பாக கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கேரளாவில் 5 ஓமிக்ராஸ் கேஸ் உள்ளது. மகாராஷ்டிராவில் 35க்கும் அதிகமான கேஸ்கள் உள்ளன.

ஓமிக்ரான்
இதனால் இதுபோன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஓமிக்ரான் பரவும் அபாயம் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவிற்குள் ஓமிக்ரான் வந்துவிட்டது. எனவே இனியும் வெளிநாட்டு பயணிகளை மட்டும் கண்காணிக்க கூடாது.

மக்கள் பயணம்
மாறாக உள்நாட்டு மக்களையும், பயணிகளையும் கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் 8 ஓமிக்ரான் சந்தேக கேஸ்கள் ஒருவேளை ஓமிக்ரான் இருப்பதாக உறுதி செய்யப்பட்டால் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளன என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம்.

தமிழ்நாடு லாக்டவுன்
ஆனால் மொத்தமாக பெரிய லாக் டவுன் வர வாய்ப்பு இல்லை. மாறாக சிறிய சிறிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மும்பையில் ஏற்கனவே புத்தாண்டு மாலை வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் புத்தாண்டு வரை கட்டுப்பாடுகள் வர வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications