புதிய வகை ஓமிக்ரான் கொரோனா நம்மை மிரட்ட தொடங்கி உள்ளது.. முதல்வர் மு.க ஸ்டாலின் பேட்டி!
சென்னை: புதிய வகை ஓமிக்ரான் கொரோனா நம்மை மிரட்ட தொடங்கி உள்ளது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் இடையே அச்சம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக நேற்று இரண்டு பேருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. இன்னும் பல சந்தேக கொரோனா கேஸ்களின் மாதிரிகள் ஜீன் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஓமிக்ரான்
இந்த நிலையில் புதிய வகை ஓமிக்ரான் கொரோனா குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில் , தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் காரணமாக நிறைவு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீர் தேங்கிய இடங்களில் எல்லாம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரவு பகல் பாராமல் அதிகாரிகள், அமைச்சர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் நாம் கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டோம். அதேபோல் மழை நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பணிகள்
அடுத்த வருடம் இதே நிலை ஏற்படாமல் இருக்க பணிகளை செய்ய வேண்டும். கொரோனா பரவலை தமிழ்நாடு அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது. ஆனால் தற்போது புதிய வகை ஓமிக்ரான் கொரோனா வந்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா நம்மை மிரட்ட தொடங்கி உள்ளது.

அச்சம்
ஓமிக்ரான் குறித்த அச்சம் வந்துள்ளது. ஆனால் மக்கள் தைரியமாக இருக்க வேண்டும். அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடித்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளளார்.
Recommended Video

தமிழ்நாடு ஓமிக்ரான்
இந்த நிலையில் முன்னதாக தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா பரவாமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டு இருந்தார். அவர் அளித்த பேட்டியில், ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டிற்குள் இன்னும் பரவவில்லை. இதுவரை எங்கும் கேஸ்கள் பதிவாகவில்லை. பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். சென்னை, திருச்சியில் ஒமிக்ரான் உறுதியானதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறு. போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம், என்று குறிப்பிட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications