2-ம் அலை காலத்தில் உயிரிழப்பு அதிகம்.. இதை அரசு கவனிக்க வேண்டும்... ட்வீட் போட்டு சொன்ன ராமதாஸ்
இரண்டாம் அலை பரவல் பாதிப்பு குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: கொரோனா முதல் அலை காலத்தில் தமிழகத்தில் அதிகபட்ச தினசரி உயிரிழப்பு 129 மட்டும் தான். ஆனால், இப்போது இரண்டாம் அலை காலத்தில் அதிகபட்ச தினசரி உயிரிழப்பு 493. இதை அரசும், அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சுட்டிக் காட்டி உள்ளார்.
இந்தியாவில் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இது தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.. அதன் தாக்கம் பெரும் அளவில் இருக்கிறது... இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. லாக்டவுனும் அமலில் உள்ளது..!

இந்நிலையில், கொரோனா நிலவரம், அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடாமல் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.. சில சமயம், தொற்றை தடுக்கும் வகையில் மாநில அரசுக்கும் ஆலோசனைகளை சொல்லி வருகிறார்.. நல்ல திட்டம் என்றால் பாராட்டுகிறார்.. குறைகள் என்றால் விமர்சிக்கிறார்..
அந்த வகையில், "நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொற்று தொட்டுவரும் நிலையில், மற்றொருபுறம் நோய்த்தொற்று கண்டறியப்பட்டும் கண்டறியப்படாமலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டதாகவும், அதுகுறித்த செய்திகள் மறைக்கப்படுவதாகவும், கொரோனா இறப்புகளை அரசே மறைப்பது அறத்தை மீறிய செயலாகும்" என்றும் சில தினங்களுக்கு முன்புகூட தெரிவித்திருந்தார்.
கொரோனா முதல் அலை காலத்தில் தமிழகத்தில் அதிகபட்ச தினசரி உயிரிழப்பு 129 மட்டும் தான். இப்போது இரண்டாம் அலை காலத்தில் அதிகபட்ச தினசரி உயிரிழப்பு 493. இதை அரசும், அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) June 1, 2021
தற்போதும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "கொரோனா முதல் அலை காலத்தில் தமிழகத்தில் அதிகபட்ச தினசரி உயிரிழப்பு 129 மட்டும் தான். இப்போது இரண்டாம் அலை காலத்தில் அதிகபட்ச தினசரி உயிரிழப்பு 493. இதை அரசும், அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications