சென்னை அரும்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி?.. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறுகிறார்கள். எனினும் இதை தமிழக அரசு உறுதிப்படுத்தவில்லை.
சென்னை அரும்பாக்கத்தில் அசோக்நகரில் உள்ள வெளிமாநிலத்தவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவலின்பேரில் சுகாதாரத் துறையினர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து அவரது உடல் முழுவதையும் மூடி பாதுகாப்பாக அழைத்து சென்றது போல் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

எனினும் இதன் நம்பகத்தன்மை தெரியவில்லை. இதுகுறித்து தமிழக அரசும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 168 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துவிட்டனர். தமிழகத்தை பொருத்தவரை இதுவரை இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.
ஏற்கெனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் ஓமனில் இருந்து வந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இவரது குடும்பத்தினர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
இவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் கொரோனா இல்லை என முடிவுகள் வந்ததை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவர்தான் தமிழகத்தின் முதல் கொரோனா நோயாளியாவார். அது போல் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் இரண்டாவதாக டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 20 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததும் அதில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் இன்னொருவர் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications