சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் கட்டுக்குள் இருக்கும் கொரோனா.. சிறு மாவட்டங்களில் வேகமெடுக்கிறது.. மாவட்ட நிலவரம் இதோ

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், மாவட்டங்களின் நிலவரம் மோசமாக உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67,532 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 37,78,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரே நாளில் மேலும் 120 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 24, கோவையில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா.. இதுவரை 3.43 லட்சம் பேர் பாதிப்புதமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா.. இதுவரை 3.43 லட்சம் பேர் பாதிப்பு

பிற மாவட்டங்கள்

பிற மாவட்டங்கள்

இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,886 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,705 பேருக்கு கொரோனா. சுமார் 4 மடங்கு அதிகம் பிற மாவட்டங்களில் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது.

சென்னையை தவிர்த்த மாவட்டங்கள்

சென்னையை தவிர்த்த மாவட்டங்கள்

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில், 393 பேர் என்ற அளவுக்கு அதிகமாக பாதிப்பு பதிவாகியுள்ளது. கடலூரில் 390 பேருக்கு பாதிப்பு உள்ளது.

மாவட்ட நிலவரம்

மாவட்ட நிலவரம்

செங்கல்பட்டு 224, கன்னியாகுமரி 209, மதுரை 136, புதுக்கோட்டை 164, சேலம் 268, தேனி 279, திருவள்ளூர் 308, நெல்லை 100, தூத்துக்குடி 75, திருச்சி 121, விழுப்புரம் 138, விருதுநகர் 212, தென்காசி 147 என்ற அளவு பதிவாகியுள்ளது.

டிரெண்ட்

டிரெண்ட்

மதுரையில் முன்பைவிட தற்போது பாதிப்பு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேநேரம், சின்ன மாவட்டங்களான தேனி, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்டவற்றில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்த பாதிப்பு இப்போது குறைந்துள்ளது. இதுவரை அதிகரிக்காத மாவட்டங்களில் இப்போது அதிகரிப்பதும், ஏற்கனவே அதிகரித்த மாவட்டங்களில் குறைவதுமாக உள்ளது கொரோனா நிலவரம்.

English summary
coronavirus spread in Madurai is lesser now than before. At the same time, the impact is increasing in the smaller districts like Theni, Virudhunagar and Pudukottai. Increased vulnerability in Thoothukudi district has now subsided. The corona situation is now increasing in districts that have not yet increased and decreasing in districts that have already increased.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X