அதிர்ச்சி.. ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா.. 2000ஐ கடந்த தமிழகம்.. சென்னையில் மிக மோசமான நிலை!
தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று மீண்டும் தமிழகத்தில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.
ஆனாலும் கொரோனா வேகம் குறையாமல் தொடர்ந்து வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில்தான் தினமும் கொரோனா அதிகமாக ஏற்படுகிறது.

இன்றைய நிலை என்ன
தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை இன்றுதான் தமிழகத்தில் ஒரே நாளில் அதிக கேஸ்கள் வந்துள்ளது. சென்னையில் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிஸ்சார்ஜ் கணக்கு
தமிழகத்தில் மொத்த 121 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனா காரணமாக தமிழகத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். தமிழகத்தில் ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 902 ஆக உயர்வு. இன்று 27 பேர் மட்டுமே தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 1128 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

செங்கல்பட்டில் எத்தனை
இன்று செங்கல்பட்டில் 12 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் செங்கல்பட்டில் 70 பேருக்கு கொரோனா உள்ளது. கள்ளகுறிச்சியில் 3 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் அங்கு 9 பேருக்கு கொரோனா உள்ளது . காஞ்சிபுரத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு மொத்தம் 20 பேருக்கு கொரோனா உள்ளது. நாமக்கல்லில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு மொத்தம் 61 பேருக்கு கொரோனா உள்ளது.

மொத்த டெஸ்ட்
தமிழகத்தில் இன்று 7093 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 101874 கொரோனா சோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இன்று 6850 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. 93819 பேருக்கு இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ஏற்பட்டதை விட இன்று தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications