மிக தீவிரமாக பரவுகிறது.. கட்டுப்படுத்த முடியவில்லை.. தமிழகத்தில் இன்று 1892 பேருக்கு கொரோனா.. ஷாக்!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் தீவிரமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த மே 31ம் தேதி தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் 1000+ கேஸ்கள் பதிவானது. அதை தொடர்ந்து தினமும் தமிழகத்தில் 1000+ கேஸ்கள் பதிவாகி வருகிறது.
அதிலும் கடந்த ஒரு வாரமாக தினமும் 1500+ கேஸ்கள் தமிழகத்தில் வருகிறது. தமிழகத்தில் பலி எண்ணிக்கையும் மிக தீவிரமாக பரவி வருகிறது.

தமிழகம் இன்று
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 40698 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத அளவாக இன்று புதிய உச்சமாக தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் 2000ஐ நெருங்கி வருகிறது.

சென்னை இன்று
சென்னையில் இன்று மொத்தம் 1479 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றுதான் இதுவரை இல்லாத மிக அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. சென்னையில் மொத்தமாக 28924 கேஸ்கள் இதுவரை பதிவாகி உள்ளது. சென்னையில் மொத்தமாக ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 13906 ஆக உள்ளது. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு இன்று அதிக கேஸ்கள் ஏற்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று 1342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 22047 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 18281 ஆக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை வேகமாக தமிழகத்தில் குறைந்து வருகிறது.

பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று 18 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 367 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தினமும் பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. நேற்று 23 பேர் பலியான நிலையில் இன்று தமிழகத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications