தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட 34 பேரும் எப்படி இருக்கிறார்கள்?- அமைச்சர் மா.சு முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ்கள் 34 ஆக உயர்ந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    #BREAKING சென்னையில் மட்டும் 26 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு!

    தமிழ்நாட்டில் இன்று மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிக அளவில் பதிவாகி வந்த நிலையில் தமிழ்நாட்டில் திடீரென 33 கேஸ்கள் பதிவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பயணிகள், அவர்களின் காண்டாக்ட்ஸ்களுக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது 4 அடுக்கு பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பேட்டி

    பேட்டி

    இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. அவர்களின் காண்டாக்ட் சோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 57 பேருக்கு எஸ் ஜீன் டிராப் இருப்பது கண்டறியப்பட்டது. அதில்தான் இந்த 34 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டது.

    சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

    சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

    34 ஓமிக்ரான் நோயாளிகளும் ஏற்கனவே கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் மாதிரிகள் ஏற்கனவே மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டது. எஸ் ஜீன் டிராப் என்பதால் இவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தோம். இப்போது ஓமிக்ரான் இவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஓமிக்ரான் தமிழ்நாடு

    ஓமிக்ரான் தமிழ்நாடு

    இவர்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். 34 பேருக்கும் அறிகுறி இல்லாத ஓமிக்ரான் கொரோனா ஏற்பட்டுள்ளது. சிலருக்கு எஸ் ஜீன் டிராப் வந்து 10-12 நாட்கள் ஆகிறது. இதனால் அவர்கள் இப்போது குணமடைந்து இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களின் டெஸ்ட் ரிசல்ட் இன்று நெகடிவாக வரும் வாய்ப்பு உள்ளது.

    ஓமிக்ரான் கேஸ்

    ஓமிக்ரான் கேஸ்

    எல்லோரும் வேகமாக குணமடைந்து வருகிறார்கள். எல்லோரும் மைல்டு கேஸ்கள்தான். இவர்களுக்கு தலைவலி, தொண்டை வலி போன்ற லேசான அறிகுறிகள்தான் உள்ளது. இவர்களை ஏற்கனவே கண்காணிப்பில் வைத்து இருந்தோம். அதனால் அவர்களுக்கு எளிதாக சிகிச்சை அளிக்க முடிந்தது.

    தடுப்பூசி

    தடுப்பூசி

    இவர்கள் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டவர்கள். பயப்படும்படி பாதிப்பு இல்லை. எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து நேரில் சென்று இவர்களை கண்காணித்து வருகிறோம்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    மொத்தமாக 4000க்கும் அதிகமான காண்டாக்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு அதில்தான் 57 பேர் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 34 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டனர். சென்னையில் 26 பேர், சேலம் 1, மதுரை 4, திருவண்ணாமலையில் 2 ஆகிய ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+