கொரோனா தொடர்பான கேள்விகள்.. உங்களுக்கு விடை அளிக்கும் தமிழக அரசு.. உதவும் ஐவிஆர்எஸ் மையம்!
சென்னை: கொரோனா குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக தமிழக அரசு ஐவிஆர்எஸ் எனப்படும் உதவி மையத்தை தொடங்கி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேட்டி அளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், நாங்கள் தினமும் 2000 சாம்பிள்கள் எடுக்கிறோம். மொத்தமாக 34 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 80 லட்சம் பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் உடன் இணைந்து தமிழக அரசு ஐவிஆர்எஸ் எனப்படும் உதவி எண்ணை அறிவித்துள்ளது. இந்த ஐவிஆர்எஸ் என்பது Interactive Voice Response System என்பதாகும். இந்த வாய்ஸ் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் தற்போது தமிழகத்தில் கொண்டு வரப்பட்டு செயலில் உள்ளது.
இதன் எண் 9499912345 ஆகும். இந்த எண்ணுக்கு யார் வேண்டுமானாலும் அழைக்கலாம். உங்களுக்கு காய்ச்சல் இருந்தாலோ, கொரோனா அறிகுறி இருப்பது போல தெரிந்தாலோ நீங்கள் இந்த எண்ணுக்கு அழைக்கலாம். உங்கள் விவரங்களை இதில் வழங்க வேண்டும்.
இதன் மூலம் உங்களுக்கு இருக்கும் அறிகுறியை வைத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்படும். நீங்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டுமா? அல்லது மருத்துவமனையில் சேர வேண்டுமா என்று இது கூறும். இது இலவசமான சேவை.
மக்கள் எல்லோரும் இந்த சேவையை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications