டைம் லைன் ரெடி பண்ணுங்க.. எல்லோரையும் பிடிச்சு சோதியுங்கள்.. விஜயபாஸ்கர் அதிரடி.. சென்னையில் கொரோனா!
சென்னையில் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில் அவர் தொடர்பு கொண்ட எல்லா நபர்களையும் கண்டுபிடிக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னையில் ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில் அவர் தொடர்பு கொண்ட எல்லா நபர்களையும் கண்டுபிடிக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னையில் தற்போது இரண்டாவது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் பணி நிமித்தமாக சென்னை வந்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார். கடந்த ஒரு வாரம் முன் சென்னை வந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இவருக்கு சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்
பொதுவாக கொரோனா வைரஸ் அல்லது அதைப்போன்ற தொற்று நோய் வைரஸ்களை கட்டுப்படுத்த காண்டாக்ட் டிரேசிங் - contact tracing என்று முறை பயன்படுத்தப்படும். இந்த முறை மிக வித்தியாசமானது. அதே சமயம் மிகவும் கடினமானது. காண்டாக்ட் டிரேசிங் முறை என்பது கொரோனா வைரஸ் உள்ள நபர் தொடர்பு கொண்ட எல்லோரையும் கண்டுபிடிப்பது ஆகும். இது மிக நீண்ட செயல் ஆகும்.

தமிழகம்
அதாவது தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா இருக்கிறது. அவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். எனில் இன்றில் இருந்து 14 நாட்களுக்கு முன் வரை அவர் எங்கெல்லாம் சென்றார் என்று கண்டுபிடிக்க வேண்டும். யாரை எல்லாம் சந்தித்தார் என்று கண்டுபிடிக்க வேண்டும். எங்கு சாப்பிட்டார், யாரிடம் பேசினார், எங்கு தங்கினார், எதில் பயணம் செய்தார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

லிஸ்ட் உருவாக்க வேண்டும்
இதை எல்லாம் வைத்து லிஸ்ட் உருவாக்க வேண்டும். அதாவது முதல் நாள் இங்கு சென்றார், இங்கு சாப்பிட்டார், இவர்களை சந்தித்தார் என்று லிஸ்ட் உருவாக்க வேண்டும். இதை வைத்து 14 நாட்களுக்கும் ஒரு டைம்லைன் உருவாக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதித்த நபர் தொடர்பு கொண்ட எல்லோரையும் கண்டுபிடிக்க முடியும். அவர்கள் எல்லோரையும் சோதிக்க முடியும்.

என்ன முறை
இதுதான் காண்டாக்ட் டிரேசிங் முறை ஆகும். இந்த நிலையில் சென்னையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த முறையை பயன்படுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அந்த நபர் சென்னையில் யாரை எல்லாம் பார்த்தார். எங்கு தங்கினார். யாருடன் பேசினார், சென்னை பேருந்துகளில் பயணம் செய்தாரா என்று விசாரித்து வருகிறார்கள்.

சென்னை ஒரு வாரம்
அவர் சென்னையில் ஒரு வாரம் இருந்துள்ளார். இந்த 7 நாட்களுக்கான டைம் லைன் ஒன்றை உருவாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரிசையாக எல்லோரையும் கண்டுபிடித்து எல்லோருக்கும் உடனே சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிரமான பணிகள் நடந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை முதலில் எப்படி ஒருவரை சீக்கிரம் குணப்படுத்தியதோ அதேபோல் மீண்டும் குணப்படுத்தும் என்று நம்புவோம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications