30 நாள்.. அமெரிக்காவிலும் இதேதான் நடந்தது.. வேகமாக உயரும் தமிழகத்தின் 'கொரோனா கிராப்'.. அந்த ஒற்றுமை
அமெரிக்காவில் தற்போது எவ்வளவு வேகத்தில் கொரோனா பரவி வருகிறதோ அதே வேகத்தில் விரைவில் தமிழகத்திலும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.
சென்னை: அமெரிக்காவில் தற்போது எவ்வளவு வேகத்தில் கொரோனா பரவி வருகிறதோ அதே வேகத்தில் விரைவில் தமிழகத்திலும் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் 1 மாதத்திற்கு பின் நடந்த அதே சம்பவம் தற்போது தமிழகத்திலும் நடக்க தொடங்கி உள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனாவின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 969 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 915 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 44 பேர் குணமடைந்து உள்ளது. 10 பேர் பலியாகி உள்ளனர்.
இன்னொரு பக்கம் அமெரிக்காவில் மொத்தம் 533,115 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் 20,580 பேர் பலியாகி உள்ளனர். இதில்தான் தமிழகத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முக்கியமான ஒரு தொடர்பு உள்ளது.

முதல் நபருக்கு கொரோனா
அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது பிப்ரவரி 15. சரியாக ஒரு மாதம் கழித்து மார்ச் 15ம் தேதி அங்கு கொரோனா வேகம் எடுத்தது. அதுவரை தினமும் 100, 200 என்ற எண்ணிக்கையில் கொரோனா பரவிய நிலையில் மார்ச் 15ல் இருந்து தினமும் ஆயிரம் பேருக்கு என்ற வீதத்தில் கொரோனா பரவ தொடங்கியது. கொரோனா பரவும் ஸ்டைல் இதுதான் என்று கூட கூறலாம். அதாவது முதல் ஒரு மாதம் கொரோனா மிக மெதுவாக பரவும்.

கொரோனா வேகம் எடுக்கும்
போக போக வேகம் எடுத்து சரியாக 30 நாட்களில் கொரோனா வேகம் எடுக்கும். சீனாவில் டிசம்பர் 1ல் தோன்றிய கொரோனா சரியாக ஜனவரி 2ல்தான் மிக தீவிரமாக பரவியது. அமெரிக்காவில் சரியாக ஒரு மாதம் கழித்து மார்ச் 15ம் தேதி அங்கு ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு கொரோனா வந்தது. 4000 பேர் வரை மெதுவாக சென்ற கொரோனா அதன்பின்தான் வேகம் எடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து தினமும் 5 ஆயிரம் பேருக்கு கூட கொரோனா பரவியது. தற்போது ஒரு நாளுக்கு 30 ஆயிரம் பேருக்கு அங்கு கொரோனா சராசரியாக ஏற்படுகிறது.

தமிழகத்திலும் இதேதான் நடக்கிறது
இதன் மூலம் ஒரு மாதம் கழித்துதான் கொரோனா வேகம் எடுக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது இதேதான் தமிழகத்திலும் நடக்க தொடங்கி உள்ளது. தமிழத்தில் முதல் நபருக்கு மார்ச் 7ம் தேதி கொரோனா ஏற்பட்டது. அப்போதே அவர் குணப்படுத்தப்பட்டு, விரைவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் போக போக கொரோனா வேகம் எடுத்தது. தினமும் 1 மற்றும் 2 என்று சிலருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டது. ஆனால் சரியாக அந்த மாதத்தின் முடிவில்தான் தமிழகத்தில் கொரோனா வேகம் எடுத்தது.

மார்ச் மாதம் என்ன நடந்தது?
மார்ச் 30ம் தேதிதான் ஒரே நாளில் 17 (இரட்டை இலக்கத்தில் ஏற்பட தொடங்கியது) பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அப்போதுதான் தமிழகத்தில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியது. மார்ச் 31-ஆம் தேதி 57 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஏப்ரல் 1ம் தேதி 110 பேருக்கு ஏற்பட்டது. ஏப்ரல் 2ம் தேதி 75 பேருக்கும், ஏப்ரல் 3ம் தேதி 102 பேருக்கும் கொரோனா ஏற்பட்டது. அதாவது தமிழகத்தில் கொரோனா தாக்கி ஏறத்தாழ ஒரே மாதத்தில் கொரோனா வேகம் எடுத்துள்ளது.

கொரோனா வேகம் அதிகரிக்கும்
அமெரிக்காவில் எப்படி 30 நாட்களில் கொரோனா வேகம் எடுத்ததோ அதேபோல் தமிழகத்தில் 28 நாட்களிலேயே வேகம் எடுத்துள்ளது. இனி இதன் வேகம் இன்னும் அதிகரிக்கலாம். தமிழகம் இனிதான் கவனமாக இருக்க வேண்டும் எனது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அமெரிக்காவை விட மெதுவாகத்தான் கொரோனா சோதனை நடக்கிறது. தமிழகத்தில் இன்னும் நிறைய சோதனைகள் செய்யப்பட்டு இருந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications