இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா.. 1 லட்சத்தை நெருங்குகிறது!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4343 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 98392 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கி வருகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிக கேஸ்கள் தமிழகத்தில் வந்துள்ளது. தினமும் 3000+ கேஸ்கள் வந்த நிலையில் ஒரே அடியாக இன்று 4000+ கேஸ்கள் இன்று தமிழகத்தில் வந்துள்ளது.

பலி எண்ணிக்கை
சென்னையில் இன்று 2027 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 62598 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா காரணமாக 57 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1321 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

டிஸ்சார்ஜ் எத்தனை
தமிழகத்தில் இன்று மட்டும் 3095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் மொத்தமாக 56021 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இன்று 33488 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 1235692 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

என்ன சோதனை
தமிழகத்தில் இன்று 32456 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக பேருக்கு 1179649 கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே நாம்தான் அதிகமாக கொரோனா சோதனை செய்துள்ளோம். மகாராஷ்டிரா, டெல்லி, கேரளாவை விட அதிகமாக நாம் சோதனை செய்து இருக்கிறோம். சென்னையை அடுத்து மதுரையில் இன்று 274 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் எப்படி
மதுரையில் மொத்தமாக 3133 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டில் இன்று 171 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் மொத்தமாக 5807 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.திருவள்ளூரில் இன்று 164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் மொத்தமாக 4176 கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications