கொரோனா பாதிக்கப்பட்டவரின் சொந்த ஊருக்கு சென்ற மருத்துவ குழு.. காஞ்சிபுரத்தில் தீவிர சோதனை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் சொந்த ஊருக்கு தமிழக அரசு சார்பாக மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் சொந்த ஊருக்கு தமிழக அரசு சார்பாக மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் மொத்தம் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு கொரோனா பரவி உள்ளது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது.
நேற்றுதான் இவருக்கு இந்த வைரஸ் தாக்கியது.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர் தொடர்பு கொண்ட நபர்களை எல்லாம் தற்போது சோதனை செய்த முடிவு செய்துள்ளனர்.

வைரஸ் பாதிப்பு
வைரஸ் பாதிக்கப்பட்ட இந்த நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். அங்கு இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கிறார். 12 வருடமாக அங்கு பணியாற்றும் இவர், அவ்வப்போது தமிழகம் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு வந்ததை அடுத்து சரியாக 10 நாட்களுக்கு முன் இந்தியா வந்துள்ளார்.

காஞ்சிபுரம் எப்படி
காஞ்சிபுரம் வந்த இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வறட்டு இருமல், சளி தொல்லை இருந்துள்ளது. இந்த பிரச்சனையோடு அவர் சென்னைக்கும் ஒருமுறை சென்று வந்துள்ளார். இதையடுத்து இவர் சிகிச்சைக்காகக் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரியை புனே அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வந்தது.

கொரோனா வைரஸ்
அதன்படி அவருக்கு கொரோனா வைரஸ் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ குழு ஒன்று கொரோனா பாதித்தவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழு, அந்த ஊரில் உள்ள எல்லோரையும் சோதனை செய்ய உள்ளது. அந்த நபர் தொடர்பு கொண்ட எல்லோரையும் சோதனை செய்ய உள்ளது. இதனால் 10 மருத்துவர்கள் கொண்டு குழு அங்கே செல்கிறது.

மொத்த கிராமம்
அதேபோல் அந்த நபர்கள் குடும்ப உறுப்பினர்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ளனர். இவர்களில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர்களை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள அந்த சிறிய கிராமம் பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த கிராமத்தின் பெயரை தமிழக அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications