31ம் தேதி தொடங்கியது.. விடாமல் துரத்துகிறது.. 10 நாட்களில் தமிழகத்தை புரட்டிப்போட்ட கொரோனா.. பகீர்!
சென்னை: தமிழகத்தில் கடந்த 31ம் தேதியில் இருந்து தினமும் 1000+ கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 19 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,667 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 6.38 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நிலைமை என்ன
தமிழகத்தில் கடந்த 31ம் தேதியில் இருந்து தினமும் 1000+ கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. கடந்த மே 31ம் தேதி 1149 கேஸ்கள் பதிவானது. அதுதான் தொடக்கம். அப்போது இதனால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. ஆனால் நிலைமை அதன்பின் மோசமாக ஆனது. ஜூன் 2ம் தேதி 1091 கேஸ்கள் பதிவானது. இதனால் மீண்டும் தமிழகத்தில் கேஸ்கள் 1000க்கும் கீழ் போகுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

எப்படி
வரிசையாக அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்தது. மீண்டும் ஜூன் 3ம் தேதி 1286 கேஸ்கள் பதிவானது. ஜூன் 4ம் தேதி 1384 கேஸ்கள் பதிவானது. ஜூன் 5ம் தேதி 1438 கேஸ்கள் பதிவானது. ஜூன் 6ம் தேதி 1458கேஸ்கள் பதிவானது. ஜூன் 7ம் தேதி 1515 கேஸ்கள் பதிவானது. இந்த நாள்தான் தமிழகத்தில் ஒரே அடியாக 1500கும் அதிகமான கேஸ்கள் பதிவானது. தமிழக மக்களை இந்த எண்ணிக்கை நிலைகுலைய வைத்தது.

இன்று என்ன
ஆனால் அதன்பின்பும் கேஸ்கள் அதிகரித்தது. ஜூன் 8ம் தேதி 1562கேஸ்கள் பதிவானது. ஜூன் 9ம் தேதி 1685 கேஸ்கள் பதிவானது. ஜூன் 10ம் தேதி 1927 கேஸ்கள் பதிவாகி உள்ளது. நேற்றைய நாளை விட இன்று 300 கேஸ்கள் அதிகமாக ஆகி உள்ளது. இன்று கிட்டத்தட்ட 2000 கேஸ்கள் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் கேஸ்கள் 2000+ தினமும் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் அதிகம்
தமிழகத்தில் இன்று 16 ஆயிரத்திற்கும் அதிகமான சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா சோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க கேஸ்களும் அதிகரிக்கிறது. இதனால் தமிழகத்தில் கண்டிப்பாக கொரோனா அதிக அளவில் பரவி உள்ளது என்பது உறுதியாகிறது. வரும் நாட்களில் அதிகமாக சோதனைகள் செய்யப்பட்டால் கண்டிப்பாக கேஸ்களும் மிக அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications