தமிழகத்தில் இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா தொற்று... ஒருவர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 -ஆக அதிகரித்துள்ளது. அதில் இன்று மட்டும் ஒருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு 1341 பேர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார்கள். அதில் இன்று மட்டும் 29 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காற்றைவிட வேகமாக கொரோனா பரவி வருவதால் சென்னை மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் உள்ள நிலையில் இன்று மட்டும் 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூரில் 18 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும், அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடலூர், திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், சேலம் மற்றும் தேனி மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 20 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லாதது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று காலை செய்திகள் வெளியாகிய நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் என்ற பெருமையை அடைகிறது கிருஷ்ணகிரி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications