சின்ன ஏரியா.. அடுத்தடுத்த மர்ம கேஸ்கள்.. கொரோனா ஸ்டேஜ் 3 அச்சத்தில் "ராயபுரம்".. பகீர் காரணங்கள்!

கொரோனா காரணமாக தமிழகத்தில் சென்னையில் இருக்கும் ராயபுரம் பகுதியில்தான் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா காரணமாக தமிழகத்தில் சென்னையில் இருக்கும் ராயபுரம் பகுதியில்தான் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற மாவட்டங்களை விட இந்த சின்ன ஏரியாவில் அதிகமான கேஸ்கள் உள்ளது.

Recommended Video

    கொரோனா ஸ்டேஜ் 3 அச்சத்தில் இருக்கும் ராயபுரம்

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதன் மூலம் 1,596 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் நேற்று 55 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னை ராயபுரம்

    சென்னை ராயபுரம்

    சென்னையில் ராயபுரத்தில்தான் கேஸ்கள் அதிகமாக இருக்கிறது. ராயபுரத்தில் நேற்று மட்டும் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 116 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்து தண்டையார்பேட்டையில் மொத்தமாக 46 பேருக்கு கொரோனா உள்ளது. திருவிக நகர் மற்றும் தேனாம்பேட்டையில் 42 பேருக்கு அதிகமாக கொரோனா உள்ளது. தமிழகத்தில் இருக்கும் பல மாவட்டங்களை விட ராயபுரத்தில் பலருக்கு கொரோனா அதிகம் உள்ளது.

     முக்கிய காரணம்

    முக்கிய காரணம்

    சென்னையில் ராயபுரம் இப்படி மோசமாக பாதிக்க நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணம், அங்கு கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் கூட கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது ஒருவருக்கு கொரோனா அறிகுறி வந்தால் அவரை தனிமைப்படுத்துவார்கள். அதன்பின் அவரை டெஸ்ட் செய்வார்கள். ஆனால் ராயபுரத்தில் இப்படி நடக்கவில்லை. அங்கு தனிமைப்படுத்தப்படாத நபர்களுக்கும் கூட கொரோனா வருகிறது.

    மிக மோசமான நிலை

    மிக மோசமான நிலை

    அதாவது கொரோனா ஏற்பட வாய்ப்பே இல்லாத நபர்களுக்கும் கூட அங்கு கொரோனா ஏற்படுகிறது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் வெளிநாடு செல்லவில்லை. அதேபோல் வெளிநாடு சென்றவர்களோடு தொடர்பும் கொள்ளவில்லை. ஆனாலும் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுதான் ஆச்சர்யம் அளிக்கிறது. இவர்கள் எங்காவது கொரோனா பாதித்தவர்களை சந்தித்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    ஸ்டேஜ் 3 பரவல்

    ஸ்டேஜ் 3 பரவல்

    இதனால் ஒருவேளை ராயபுரத்தில் ஸ்டேஜ் 3 பரவல் இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் ஸ்டேஜ் 3 பரவல் இல்லை என்று அரசு உறுதியாக கூறிவிட்டது. அதேபோல் இதுவரை எடுக்கப்பட்ட ரேண்டம் டெஸ்ட் சோதனைகளும் அதேபோல் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பிற பகுதிகளில் ஸ்டேஜ் 3 இல்லை. ஆனால் ராயபுரத்தில் மட்டும் ஸ்டேஜ் 3 வந்து இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    காண்டாக்ட் டிரேசிங் செய்யவில்லை

    காண்டாக்ட் டிரேசிங் செய்யவில்லை

    இப்படி ராயபுரத்தில் கேஸ்கள் அதிகரிக்க இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அங்கு சரியாக கொரோனா காண்டாக்ட் டிரேசிங் செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள். அதாவது கொரோனா பாதித்த நபர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்களே அவர்களை எல்லாம் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதுதான் காண்டாக்ட் டிரேசிங். ஆனால் ராயபுரத்தில் அது சரியாக செய்யப்படவில்லை.

    மர்ம கேஸ்கள் அதிகம்

    மர்ம கேஸ்கள் அதிகம்

    அப்படியே சரியாக செய்து இருந்தாலும் அது சரியாக பலன் அளிக்கவில்லை. இதனால் ராயபுரத்தில் பெரிய அளவில் கேஸ்கள் வெடித்த வண்ணம் உள்ளது. இதை மர்ம கேஸ்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அங்கு நிலைமை கைமீறி போய்விட்டது என்றுதான் கூறுகிறார்கள். உடனடியாக மக்கள் வீட்டிற்குள் அடைத்துவிட்டு, ஒவ்வொரு வீடு வீடாக கொரோனா சோதனையை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அறிகுறி இல்லாத நபர்களுக்கும் அங்கு கொரோனா சோதனையை செய்ய வேண்டும்.

    மிக சிறிய பகுதி

    மிக சிறிய பகுதி

    ராயபுரம் மிகவும் சிறிய பகுதிதான். அங்கு மக்கள் மிகவும் கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு தனி மனித இடைவெளி என்பது மிகவும் கடினமான விஷயம். இதுவும் கூட அங்கு கொரோனா அதிகம் பரவ காரணம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் மக்களுக்கு அங்கு போதிய அடிப்படை வசதி இல்லை. அங்கு இருக்கும் மீனவ குடும்பம் போதிய வசதியுடன் இல்லை. இவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வும் இல்லை. அப்படி இருக்கும் போது கொரோனா இவர்களை எளிதாக தாக்குகிறது என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+