நாடே "லாக் டவுன்" ஆகுமா.. வேகம் எடுக்கும் கொரோனா.. லாக் டவுன் விதிகள் என்ன.. சேவைகள் என்ன?
லாக் டவுன் சமயங்களில் கிடைக்கும் சேவைகள் என்னென்ன
சென்னை: அதிவேகமாக பரவி வருகிறது கொரோனா.. அதனால் லாக் டவுன் ஒன்றுதான் சரியான வழி என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.. ஒட்டுமொத்த நாட்டையே லாக் டவுனுக்குள் கொண்டு வந்தால்தான் வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் நுழைய முடியும் என்கிறார்கள்.. எனவே இந்தியாவே லாக் டவுன் ஆகவும் வாய்ப்பு உள்ளது.. லாக் டவுன் என்றால் என்ன? அப்படி ஒருவேளை லாக் டவுன் செய்யப்பட்டால் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? மக்கள் என்னென்ன சேவைகளை மட்டும் பெற முடியும் என்று பார்க்கலாம்!
Recommended Video
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காகத்தான் ஒருநாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது.. அந்த வகையில் சக்ஸஸ்தான்..இதன் தொடர்ச்சியாகத்தான் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை லாக்-டவுன் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் என்பது ஒரு அவசரகால நடைமுறை ஆகும். ஒருகுறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களை காப்பதற்காக மட்டும் முடக்கப்படுவது.. மக்கள் வெளியே செல்லலாம்.. ஆனால் யாரும் தங்கள் பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு வெளியேற கூடாது. வீட்டுக்குள் அல்லது அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.

மெடிக்கல் ஷாப்
இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இயல்பாக கிடைக்கும்.. வங்கி சேவை செயல்படும்.. மெடிக்கல் ஷாப்கள் இயங்கும்.. ஆம்புலன்ஸ்களும் இயக்கப்படும்.. போலீஸ், மின்சாரம், ஊடகம், சுகாதாரம், மளிகை, பால், உணவு போன்றவைகள் கிடைக்கவே செய்யும்.. இந்த அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்குகூட குடும்பத்தில் ஒருவர்தான் போக வேண்டும் என்று தெலுங்கானா மாநிலமும் சொல்லி உள்ளது.

ஹோட்டல்கள்
இதுபோன்ற அடிப்படை வசதிகளை செய்து தரும் பணிகளில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். கட்டுப்பாடுகள் எதுவும் இவர்களுக்கு இல்லை.. அதேபோல ஹோட்டல்கள் இயங்கும்.. ஆனால் ஹோட்டலுக்குள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இருக்காது. வேண்டுமானால் பார்சல் வாங்கி செல்லலாம்.. 4 ஒன்றாக சேர்ந்துகூட வெளியில் வரக்கூடாது!

அபார்ட்மென்ட்
அரசு அறிவித்த இந்த லாக் - டவுன் உத்தரவை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்... மீறினால் அபராதம் அல்லது ஜெயில் தண்டனைதான்.. அதேபோல குழுவாக யாருமே செல்லகூடாது.. ஒரு அபார்ட்மென்ட்களில் குடியிருப்போர் கூட இப்படி குழுவாக வெளியே நடந்து செல்லகூடாது என்கிறார்கள்.. வாக்கிங் போனால்கூட குறிப்பிட்ட அளவு தூரம்தான் செல்ல முடியும்!

மாவட்டம்
மக்கள் ஊரடங்கு என்பது நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வது.. ஆனால் லாக் டவுன் என்பது அரசின் உத்தரவு.. ஒரு மாவட்டத்தையே கட்டுக்குள் கொண்டு வருவது.. இப்படி 75 மாவட்டம் என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் லாக் டவுன் செய்தால், கண்டிப்பாக கொரோனா தாக்கத்தில் இருந்தும், அந்த வைரஸ் பரவுவதில் இருந்தும் தப்பிக்கலாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.. ஊரடங்கு உத்தரவினை 31-இன்னும் 3 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம், ராமதாஸ், அன்புமணி போன்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

நாடு முழுதும் லாக் டவுன்?
சில தினங்களுக்கு முன்பு ப.சிதம்பரம் பிரதமரின் ஊரடங்கு அறிவிப்புக்கு கருத்து தெரிவித்திருந்தார்.. அதில், "பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு நான் சற்று வியந்தேன்... பிரதமர் மோடி தான் செயல்படுவதற்கு முன் மக்களின் உணர்வுகள், எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று சோதித்துப் பார்க்கிறாரா என்று நினைத்தேன். கரோனா வைரஸுக்கு எதிரான போர் என்றால் வழக்கமான பாரம்பரிய ஆயுதங்கள் மூலம் நடத்த முடியாது. நகரங்களை, பெருநகரங்களை ஒட்டுமொத்தமாக மூடுவதன் மூலமே சாத்தியம்" என்றார். உண்மையில் இதுதான் இப்போது நமக்கு உடனடி தேவை.. நாட்டையே லாக் டவுன் செய்யக்கூடிய சூழல் விரைவில் நடந்தால் நமக்கு நல்லதுதான்!












Click it and Unblock the Notifications