இன்னும் 2 வாரம்.. சென்னையில் கொரோனா பரவலுக்கு பேனிக் பையிங் காரணம் இல்லை.. வேறு எங்கோ தவறு நடக்கிறது

சென்னையில் திடீர் என்று கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், கடந்த வாரம் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து பொருட்கள் வாங்கியதற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திடீர் என்று கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், கடந்த வாரம் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து பொருட்கள் வாங்கியதற்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Recommended Video

    ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு! சென்னையில் எகிறும் கொரோனா

    தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. மற்ற மாவட்டங்களில் தமிழகத்தில் பெரிய அளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

    நேற்று மட்டும் சென்னையில் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை நிலை

    சென்னை நிலை

    தமிழகத்தில் நேற்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 902 ஆக உயர்வு. சென்னையில் நேற்றுதான் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. சென்னையில் கொரோனா வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாறாக கொரோனா வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    மக்கள் வெளியே வந்தனர்

    மக்கள் வெளியே வந்தனர்

    4 நாட்களுக்கு முன் சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய முக்கியமான மூன்று மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 24ம் தேதி மாலைதான் வந்தது.

    பேனிக் பையிங் காரணம்

    பேனிக் பையிங் காரணம்

    இதனால் கடந்த 25ம் தேதி மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து பொருட்களை வாங்கினார்கள். சென்னை முழுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வந்தனர். சென்னையின் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கூட மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து பொருட்களை வாங்க குவிந்தனர். இதனால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    மிக மோசம்

    மிக மோசம்

    அதேபோல் சென்னையில் கொரோனா அதிகமாக பரவி இருக்கும் தண்டையார்பேட்டை, ராயபுரம், கோடம்பாக்கம், திருவிக நகர் ஆகிய இடங்களில் கூட மக்கள் மொத்தமாக வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கினார்கள். மக்கள் இப்படி அச்சம் காரணமாக வெளியே வந்து பொருட்களை வாங்குவதை பேனிக் பையிங் என்று அழைப்பார்கள். இதனால் சென்னையில் பலருக்கு கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    காரணம் இல்லை

    காரணம் இல்லை

    இப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து பொருட்களை வாங்கியதால் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது சென்னையில் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 103 கேஸ்கள் ஏற்பட்டது. சென்னையில் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகரிக்க பேனிக் பையிங் என்று மக்கள் வெளியே வந்தது காரணமாக இருக்குமோ என்று அஞ்சப்பட்டது.

    வேறு காரணம் இருக்கலாம்

    வேறு காரணம் இருக்கலாம்

    ஆனால் சென்னையில் இப்படி கொரோனா கேஸ்கள் அதிகரிக்க பேனிக் பையிங் என்று மக்கள் வெளியே வந்தது காரணம் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறீர்களா. இப்போது ஏற்படும் கேஸ்கள் எல்லாம் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு ஏற்படும் கொரோனா கேஸ்கள் ஆகும். அல்லது அவர்களை தொடர்பு கொண்ட நபர்கள் மூலம் ஏற்படும் கொரோனா கேஸ்கள் ஆகும். இவர்களுக்கும் பேனிக் பையிங்கிற்கும் எதுவும் தொடர்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

    2 வாரம் கழித்து வரும்

    2 வாரம் கழித்து வரும்

    இப்போது கொரோனா கேஸ்கள் ஏற்படுவதற்கு பின் வேறு காரணம் இருக்கும். வேறு எங்கோ தவறு நடந்து இருக்கலாம். காண்டாக்ட் டிரேசிங் சொதப்பி இருக்கலாம். கான்டெயின்மெண்ட் சோன் பகுதிகளில் கொரோனா தீவிரம் அடைந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த பேனிக் பையிங் சென்றவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதா என்று இப்போது தெரியாது. அதற்கு இன்னும் குறைந்தது 2 வாரம் ஆகும் என்று கூறுகிறார்கள்.

    ஏன் இப்படி சொல்கிறார்கள்

    ஏன் இப்படி சொல்கிறார்கள்

    அதாவது பேனிக் பையிங் சென்றவர்களுக்கு கொரோனா ஏற்பட்டதா, ஏற்படவில்லையா என்பது போக போக தெரியும். பேனிக் பையிங்கின் பின் விளைவு 2 வாரம் கழித்துதான் தெரியும். பொதுவாக கொரோனா அறிகுறி குறைந்தது 14 நாட்களுக்கு பிறகுதான் தெரிகிறது. அதனால் இப்போது கொரோனா ஏற்படும் நபர்கள் எல்லாம் பேனிக் பையிங் காரணமாக கொரோனா வந்தவர்கள் இல்லை. பேனிக் பையிங் சென்றவர்களுக்கு கொரோனா உள்ளதா என்று போகப்போக தெரியும்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+