இந்தியா.. சீனா.. அரபு.. அமெரிக்கா.. கொரோனாவிற்கு இடையே உருவான புதிய மோதல்.. என்ன நடக்குமோ!?

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் உலகம் முழுக்க நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் உலக நாடுகளுக்கு இடையே இதனால் பெரிய அளவில் சண்டைகள் வர தொடங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் உலகம் முழுக்க நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் உலக நாடுகளுக்கு இடையே இதனால் பெரிய அளவில் சண்டைகள் வர தொடங்கி உள்ளது.

Recommended Video

    கொரோனா மரபணு! கண்டறிந்த பெண் விஞ்ஞானியை மிரட்டிய சீனா

    கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவ தொடங்கிய போதே இது பெரிய பிரச்னையை ஏற்படுத்த போகிறது என்று உலக அரசியல் வல்லுநர்கள் கணித்து இருந்தனர். அதாவது கொரோனா வைரஸ் எப்படி மருத்துவ ரீதியான பிரச்னையை ஏற்படுத்துகிறதோ அதே அளவிற்கு பொருளாதார ரீதியான பிரச்னையை ஏற்படுத்தும் .

    நாடுகளுக்கு இடையே அதிகார மோதல் ஏற்படும். நாடுகளுக்கு உள்ளேயே மக்கள் இடையே மோதல்கள் ஏற்படும் என்று கணித்து இருந்தார்கள். தற்போது அதேபோல் உலக நாடுகளுக்கு இடையே மோதல்கள் நடக்க தொடங்கி உள்ளது.

    அமெரிக்கா பகை

    அமெரிக்கா பகை

    இந்த கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நாடான அமெரிக்காதான் உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளை பகைக்க தொடங்கி உள்ளது. அதன்படி முதலில் அமெரிக்கா பகைத்தது சீனாவைத்தான். கொரோனா வைரஸை சீனா நினைத்து இருந்தால் தடுத்து இருக்கலாம் என்று அமெரிக்கா கூறியது. அதோடு, சீனா இந்த வைரஸை வேண்டும் என்றே வெளியிட்டு இருந்தால் சீனா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக கூறினார்.

    தொடரும் சண்டை

    தொடரும் சண்டை

    சீனா அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் தீவிரம் அடைகிறது. மேலும் சீனாவில் உள்ள வுஹன் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் தெரிவிக்கிறது. இதற்காக விசாரிக்க குழுவையும் அவர் அமைத்து உள்ளார். ஆனால் சீனா இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. இது பெரிய பூகம்பமாக விரைவில் வெடிக்கும் என்கிறார்கள்.

    ஜெர்மனி சண்டையை

    ஜெர்மனி சண்டையை

    ஒரு பக்கம் சீனாவுடன் சண்டை இருக்கும் போது இன்னொரு பக்கம், உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கும் நிதியை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. உலக சுகாதார மையம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதெல்லாம் போக ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்களை அமெரிக்கா அடித்து பிடுங்க தொடங்கி உள்ளதும் சண்டையை பெரிதாக்கி உள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளே தற்போது அமெரிக்கா மீது கோபத்தில் உள்ளது.

    இந்தியாவுடன் அமெரிக்கா மோதல்

    இந்தியாவுடன் அமெரிக்கா மோதல்

    அதேபோல் இன்னொரு பக்கம் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் சண்டை போட்டார். இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று கூறி அதிபர் டிரம்ப் சண்டை போட்டார். இதனால் இந்தியா உடனே சீனாவிற்கு அந்த மருந்துகளை ஏற்றுமதி செய்தது. இந்த மனஸ்தாபம் இன்னும் இரண்டு நாடுகளுக்கு இடையில் போகவில்லை. நேற்றும் கூட இந்தியாவை விட அமெரிக்கா அதிக கொரோனா டெஸ்ட் செய்துள்ளது என்று கூறி டிரம்ப் வம்பிழுத்தார்.

    சீனாவுடன் சண்டை

    சீனாவுடன் சண்டை

    இந்த சண்டை இப்படி போய்க்கொண்டு இருக்க இன்னொரு பக்கம் சீனா உலக நாடுகளுடன் சண்டை போட தொடங்கி உள்ளது. கொரோனா வைரசில் இருந்து மீண்டு வந்திருக்கும் சீனா, தற்போது பொருளாதார ரீதியாக முன்னேற தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சீனா மற்ற நாடுகளில் பொருளாதார சரிவு காரணமாக பாதிப்பை சந்தித்து இருக்கும் நிறுவனங்களை வாங்க தொடங்கி உள்ளது.

    மிக மோசம்

    மிக மோசம்

    ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயினில் சில நிறுவனங்களை சீனா வாங்கிவிட்டது. அதேபோல் ஜெர்மனியில் சில நிறுவனங்களை வாங்க ஒப்பந்தங்களை செய்து இருந்தது. சீனாவின் இந்த செயலை புரிந்து கொண்ட நாடுகள் தற்போது அந்நிய முதலீட்டிற்கு தடை விதிக்க தொடங்கி உள்ளது.அதன்படி ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டில் அந்நிய முதலீடுகளை கண்காணிக்கும், அனுமதி அளிக்கும் விதிகளை கடுமையாக்கி உள்ளது. தங்கள் நாட்டில் சீனா புகுந்து நிறுவனங்களை வாங்குவதை தடுக்க இப்படி விதிகளை மாற்ற தொடங்கி உள்ளனர்.

    இந்தியா சீனா மோதல்

    இந்தியா சீனா மோதல்

    இதே விஷயத்தை இந்தியாவும் செய்ய தொடங்கி உள்ளது. ஆம் ஐரோப்பா நாடுகளை இந்தியாவும் பின்பற்றி உள்ளது. அதன்படி இந்தியாவுடன் எல்லையை பகிரும் எந்த நாடாக இருந்தாலும், இனி மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய பின்தான் இந்தியாவில் முதலீடு செய்ய முடியும் என்று அறிவித்தது. இந்தியாவில் உள்ள நிறுவனங்களை சீனா வாங்குவதை, முதலீடு செய்வதை தடுக்கும் வகையில் இந்தியா இந்த சட்டத்தை கொண்டு வந்தது.

    சீனா கோபம்

    சீனா கோபம்

    இதனால் சீனா இந்தியா மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது. அதன்படி, இந்தியாவின் புதிய அந்நிய முதலீட்டு விதி, விதிமுறைக்கு எதிரானது. உலக வர்த்தக மையம் வகுத்து இருக்கும் விதிகளுக்கு எதிராக இந்தியா செயல்படுகிறது. சீனாவின் முதலீடுகளை தடுக்கும் வகையில் இந்தியா இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியா அனைத்து நாடுகளையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இந்தியா அனைவருக்கும் வியாபாரம், வர்த்தகம் செய்ய ஒரே மாதிரி வாய்ப்பு அளிக்க வேண்டும், என்று சீனா இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்திய அரபு நாடுகள்

    இந்திய அரபு நாடுகள்

    அதேபோல் இன்னொரு பக்கம் இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் சிறிய மோதல் வெடிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவ டெல்லி மாநாடுதான் காரணம் என்று சிலர் விஷம பிரச்சாரம் செய்தனர் . இதை அறிந்து கொண்ட ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள், மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில் நடக்கும் விஷயங்களை கண்டிக்க தொடங்கி உள்ளனர். இந்தியாவில் இஸ்லாமியர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.

    அரசு நாட்டுடன் சண்டை

    அரசு நாட்டுடன் சண்டை

    ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமின்றி துபாய் உள்ளிட்ட மற்ற மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த முக்கிய மன்னர் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் இந்தியாவின் செயலை கண்டிக்க தொடங்கி உள்ளனர். கொரோனா காரணமாக ஏற்பட்ட இந்த சண்டை அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது. பாஜக எம்பிக்கள் தேஜஸ்வீ சூர்யா தொடங்கி சுப்பிரமணியன் சாமி வரை பலரின் பழைய டிவிட்களை அமீரக தலைவர்கள் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    பெரிய விரிசல்

    பெரிய விரிசல்

    இதனால்தான் பிரதமர் மோடி நேற்று கொரோனா வைரஸ் ஜாதி, மதம், மொழி பார்த்து பரவாது என்று கூறினார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக தற்போது சீனா, இந்தியா, அமெரிக்கா, அரபு அமீரகம், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் என பல நாடுகள் சண்டை போட தொடங்கி உள்ளது.

    தொடரும் குழப்பம்

    தொடரும் குழப்பம்

    இன்னொரு பக்கம் லாக் டவுனை எதிர்த்து அமெரிக்காவில் மக்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். அதேபோல் இஸ்ரேலில் நெதன்யாகு சரியாக கொரோனாவை எதிர்க்கவில்லை. அவர் தேர்தலில் தோல்வி அடைந்தும் அதிபராக இருக்கிறார் என்று மக்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர். கொரோனா காரணமாக உலகம் முழுக்க இப்படி சண்டையும், கிளர்ச்சியும் ஏற்பட தொடங்கி உள்ளது.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+