சென்னையில் 400 "ஸ்பாட்" அதுவும் பஸ் ரூட் பார்த்து.. இரவில் இனி இந்த பணி.. மாநகராட்சியின் செம பிளான்
சென்னை: சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் குப்பைகளை அள்ளும் போது அந்த பகுதிகளில் சிறிதளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது நள்ளிரவில் குப்பைகளை அள்ளும் போது இந்த போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். இதனால், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு கொஞ்சம் சிரமம் இன்றி செல்ல முடியும் என்று வாகன ஓட்டிகளும் சென்னை மாநகராட்சியின் இந்த பிளானுக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எங்கு பார்த்தாலும் நெரிசல் நிறைந்த இடமாகவே உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னையில் சவால் மிக்க பணிகளில் ஒன்றாக தூய்மை பணியும் உள்ளது. ஒரு நாள் குப்பை அகற்றாமல் விட்டாலே அந்த பகுதியே அல்லோலப்பட்டு விடும்..

குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து மக்கள் செல்லும் பாதைகளில் சிதறும் அளவிற்கு குப்பைகள் சிதறிவிடும். இதனை கருத்தில் கொண்டு சென்னையில் தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தவறாமல் சென்று குப்பைகளை சேகரித்து.. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க பெரும் பாடுபடுகிறார்கள்.
சென்னை நகரை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 5,500 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் அகற்றப்படுகின்றன. மாநகராட்சி பணியாளர்களுடன் தனியார் நிறுவன ஊழியர்களும் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேட்டரி வாகனங்களில் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அதுபோக மாநகரின் பிரதான இடங்களில் லாரிகள் மூலமாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதில் பேருந்து வழித்தடங்களில் லாரிகளில் சென்று குப்பைகள் அள்ளுவது கடும் சிரமம் ஆன பணியாக உள்ளது. பெரும்பாலும் காலை வேளைகளில் தான் குப்பைகள் அள்ளபடுவதால், டிராபிக் நெரிசல் ஏற்ப்டுகிறது. இதனை தவிர்ப்பதற்காக இரவு நேரத்தில் குப்பை அகற்றும் பணியை தொடங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
குப்பைகளை அகற்று வதை முறைப்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதை குறைக்கும் விதமாகவும் குறிப்பிட்ட சில இடங்களில் இந்த பணிகளை நள்ளிர வுக்கு மாற்ற முடிவு செய்துஉள்ளது. அதாவது, 400 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை களில் இரவு நேரத்தில் தூய்மை பணி நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் குப்பைகளை சேகரிக்க முடியும் என்பதோடு, தூய்மை பணியாளர்களும் சிரமம் இன்றி வேகமாக பணியை செய்ய முடியும் என்பதால் இந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபன் இது தொடர்பாக கூறும் போது, "கடந்த 10 நாட்களில் நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகளை ஆய்வு செய்தோம். இதில் பகல் நேரத்தை விட இரவில் குப்பைகளை அகற்றுவது எளிதாக உள்ளதாக மண்டல அலுவலர்கள் கூறினர். ஏனெனில், இரவில் போக்குவரத்து குறைவாக இருப்பதால், குப்பை அள்ளும் வாகனங்களை எளிதாக எடுத்து செல்ல முடியும்.
சோதனை அடிப்படையில் பேருந்து வழித்தட சாலைகளில் இந்த திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் உள்புற சாலைகளில் தூய்மை பணிகளை செய்வார்கள். இரவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்பதால் விரைவாக பணிகளை மேற்கொள்ள முடியும்" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications