சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"2 பேருக்கு" குறி.. அடுத்த ரெய்டு யாருக்கு.. ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு.. கலங்கும் அதிமுக.. ஏன்?

ஊழல் புகார்களின் மீது மாஜிக்கள் மீது விசாரணை எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்த ரெய்டில் யாரெல்லாம் சிக்க போகிறார்கள்? எப்போது மாஜிக்கள் மீது திமுக நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்த தகவல்கள் கசிந்து வருகின்றன..!

திமுக ஆட்சிக்கு வந்ததுமே மாஜிக்கள் மீதான ஊழல் புகார்களில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அந்த திட்டம் கொரோனாவால் தள்ளி போடப்பட்டுவிட்டது.

25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய் 25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய்

எனினும் திமுக தேர்தல் அறிக்கையில், ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று ஸ்டாலினே ஏற்கனவே சொல்லி இருந்தார்..

 கந்தசாமி

கந்தசாமி

அதற்கேற்றபடி ஆட்சிக்கு வந்ததுமே, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கந்தசாமி ஐபிஎஸ் கொண்டு வரப்பட்டார்... அதுவரை அசால்ட்டாக இருந்த அதிமுக தரப்பு, கந்தசாமியை பார்த்ததும் சற்று கலக்கமாகிவிட்டது. தற்போது தொற்று குறைந்த நிலையில், வழக்கு விசாரணைகள் வேகமெடுக்கின்றன... அதில் முதல் குறியாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கினார்.. இதற்கே இரட்டை தலைமைகள் 2 பேரும் டெல்லிக்கு விரைந்துவிட்டனர்.. எனினும், அடுத்தபடியாக எந்த மாஜி அமைச்சர் சிக்க போகிறார் என்று எதிர்பார்ப்புகள் பெருகி கொண்டிருக்கின்றன.

ஊழல்கள்

ஊழல்கள்

காரணம், எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறையில் நடந்த ஊழல் குறித்த விபரங்களை, தோண்டி எடுக்கும் பணியும் நடந்து வருகிறது... "பாரத் நெட் டெண்டரில்" நடந்த முறைகேடுகள், உணவு தானியங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடுகள், உள்ளாட்சி துறையில் நடந்துள்ள ஊழல்கள், மீன் வளத்துறையில் "வாக்கி டாக்கி" ஊழல், சுகாதாரத் துறையில் கொரோனா சிகிச்சை மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் போன்றவை குறித்த விபரங்களை சேகரிக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.

மாஜிக்கள்

மாஜிக்கள்


எனினும், 2 மாஜிக்களின் பெயர்களும் பலமாக அடிபடுகிறது.. 2 பேருமே எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்.. இருவருமே மணியான அமைச்சர்கள்.. இது தொடர்பான விசாரணை எப்போது நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழும்போதுதான், இன்னொரு செய்தியும் நமக்கு கிடைத்துள்ளது.

Recommended Video

    லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை பழிவாங்கும் செயல் - M.R.Vijayabaskar
     அறிவிப்பு

    அறிவிப்பு

    அதாவது, ஆகஸ்ட் 13-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடக்கிறது.. இது சம்பந்தமாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், இனி ஓரிரு தினங்களில் வெளியாகக்கூடும் என்கிறார்கள்.. இது திமுக அரசின் மிக முக்கியமான பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், பலவித எதிர்பார்ப்புகள், அறிவிப்புகளை நோக்கி மக்கள் காத்துள்ளனர்.. விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளதால், அதற்கான அறிவிப்புகளும் இதில் வெளியாகக்கூடும் என்று தெரிகிறது.

     அறிவிப்புகள்

    அறிவிப்புகள்

    எனவே, கூட்டத்தொடர் முடிந்த பிறகுதான் மாஜிக்கள் மீதான வழக்கு, ரெய்டு வேகமெடுக்குமாம்.. அதற்கு முன்னரே நடவடிக்கை பாய்ந்தால் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வெளியிடப்படும் அறிவிப்புகளை திசை திருப்புவது போல் அதிமுக கூச்சல் குழப்பம் ஏற்படுத்தும் என்பதால் ஸ்டாலின் விட்டுப்பிடிக்கிறாராம்...!

    English summary
    Corruption allegations against ADMK Ex Ministers who is targeted next
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X