அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்!
சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மனைவிக்குத் தியாகி படி வழங்கமுடியாது எனக் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கைவிரித்த நிலையில், அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு வாஞ்சிநாதன் மனைவிக்குத் தியாகி பென்சன் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
அண்ணா ஆட்சியில் நடந்த உலகத் தமிழ்மாநாடு திமுக ஆட்சிக்கு ஒரு மணிமகுடமாக அமைந்தது. அதுவரை கம்பராமாயணத்தை ஆபாச இலக்கியம் எனப் பரப்புரை செய்து எழுதிவந்த அண்ணா, இந்த மாநாட்டின் அடையாளமாகக் கம்பருக்குச் சிலை வைத்தது திமுக நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை முன்மொழிந்தது. ஆனால், மாநாட்டை முன்வைத்து வசூல் வேட்டை நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் சட்டசபையில் குற்றஞ்சாட்டியது. மேலும் மருத்துவமனைக் கட்டுவதற்காக நிதி வேட்டை நடத்துவதாகவும் புகார் கிளப்பியது காங்கிரஸ்.

முறைகேடாக நிதி வசூல்?
உலகத் தமிழ்நாட்டுக்காக நடத்தப்பட்ட வசூலுக்குக் கணக்கு கேட்டார்கள் காங்கிரஸ் எதிர்க்கட்சி. அண்ணா மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர். அண்ணா ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாம், நம்பிக்கை இல்லாத தீர்மானத்திற்கு அனுமதி தரப் பேரவைத் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.
சட்டமன்ற நடவடிக்கைகளை எதிர்த்து 'சுதேசமித்திரன்' எழுதியது. அதற்கு 'முரசொலி'யில் (09.09.68) விளக்கம் அளித்திருந்தார் மு.கருணாநிதி.
"தமிழ்நாட்டுச் சட்டசபையில் சென்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 31 வரை நடைபெற்ற விவாதங்களில் பிரதான அம்சம் திமுக அமைச்சரவை மீது காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம். ஐந்து நாட்கள் நடந்த நம்பிக்கையில்லாத தீர்மான விவாதத்தில் காங்கிரசார் அடுக்கிய 11 வகையான குற்றச்சாட்டில் எதையும் நிரூபித்ததாகக் கூற முடியாது.
நன்கொடை வசூலிப்பது சம்பந்தமாகக் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தங்களையே திரும்பவந்து தாக்கும் என்பதை அவர்கள் உணரவில்லை. ஆஸ்பத்திரி கட்டுவதற்குச் சுற்றறிக்கை அனுப்பியது குற்றம் என்றால், காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு பொதுக் காரியங்களுக்காக அரசாங்கம் சுமார் 60 உத்தரவுகளைப் பிறப்பித்து நன்கொடைகள் வசூலிக்கப்பட்டதே? அதை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? என அமைச்சர் மாதவன் கேட்டதற்குப் பதில் இல்லை.
உலகத் தமிழ்மாநாட்டுக்குக் கணக்கு எங்கே? என்ற கேள்விக்கு முதல்வர் அண்ணா விளக்கம் அளித்துள்ளார். உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாடுகளை மூன்று குழுக்கள் கவனித்தன. வடபாதி மங்கலம் தியாகராச முதலியார் தலைமையில் செயல்பட்ட குழு தனது கணக்கைச் சமர்ப்பித்து பத்திரிகையில் வெளியாகியுள்ளது. பெருமாள் முதலியார் தலைமையில் தலைமையில் பணியாற்றி மற்றொரு குழு தன் கணக்கை சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் மூலம் தணிக்கை செய்து சமர்ப்பித்துவிட்டது. மாவட்டங்களில் வசூலான பணம் உலகத் தமிழ் மாநாட்டுக்குக் கொடுக்கப்பட்டது போக மீதி அந்தந்த மாவட்ட அபிவிருத்தி நிதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இன்னும் என்ன கணக்கு வேண்டும்? என முதவர் கேட்டார்.
கட்டாயப்படுத்தி நிதி வசூலித்தார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறியவர்கள் காட்டிய ஆதாரம் வெறும் நன்கொடை டிக்கெட்டுகள்தான். திமுக பிரமுகர்கள் வசூலித்தார்கள் என்று டிக்கெட்டுகளைக் காட்டியவர்கள் கூட வசூலித்த பிரமுகர்கள் மோசடியில் ஈடுபட்டார்கள் என்றோ ஊழல் நடந்திருக்கிறது என்றோ குற்றஞ்சாட்ட முடியவில்லை" என்று காட்டமாக மறுப்புரை எழுதியிருந்தார் கருணாநிதி.
தொழில்துறை வளர்ச்சி பாதிப்பா?
'வடக்கு வாழ்கிறது; தெற்குத் தேய்கிறது' என்று அண்ணா உதிர்த்த வசனம் வடமாநில முதலாளிகளிடையே கசப்பை உண்டாக்கியது. தமிழ்நாட்டிற்குச் சென்று புதியதாகத் தொழில் தொடங்க முடியுமா? என அஞ்சினர். இதனால் தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் சட்டப்பேரவையில் கூறியது. அதற்கு அமைச்சர் மாதவன் சில புள்ளிவிவரங்களை அளித்து களநிலவரத்தைச் சுட்டிக்காட்டினார்.
அண்ணா ஆட்சிக்காலத்தில்தான் 'தமிழ்நாடு' பெயர் மாற்றம் செய்ய வேண்டிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தமிழில் தமிழ்நாடு என அழைக்கலாம். ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றே இருக்கட்டும். ஏனெனில் வெளிநாட்டவர்களுக்கு மெட்ராஸ் என்பதே பெரிதும் அறிந்த சொல் என்று ஒரு விநோத விளக்கம் தரப்பட்டது. ஆனால், திமுக, சட்டத்திருத்தம் கொண்டுவந்து தமிழ்நாடு என மாற்றியது. இச்செயலை 'தமிழ்நாடு பெயர் மாற்றம் வருவது திமுகவின் ராஜ தந்திரத்திற்குக் கிடைத்த வெற்றி' என்று சுதேசமித்திரன் எழுதியது.
அப்பத்திரிகை நிருபர் எழுதிய சிறப்புக் கட்டுரையில் காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்ததைச் சுட்டிக்காட்டி, 'பரபரப்புடன் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு வெளிநடப்பு சிறந்த சாதனம்தானே' எனக் கூறியது. உலகத் தமிழ்மாநாட்டின் ஒரு பகுதியாகச் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகிக்குச் சிலை வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக நெடுஞ்செழியன் அறிவித்திருந்தார்.
வாஞ்சிநாதன் மனைவிக்கு பென்சன் இல்லையா?
பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மு.கருணாநிதி, "பாரதி, வள்ளுவர், பாரதிதாசன் ஆகியோருக்கும் மெரினாவில் சிலை திறக்கப்பட்டும்" என்றார். கண்ணகியின் உருவம் எப்படி அமைப்பது என்று பிரபல ஓவியர் மாதவன் கலந்து ஆலோசித்தார் இவர். இவர் தீட்டித் தரும் ஓவியத்தை அடிப்படையாக வைத்துச் சிலை வடிவமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
உலகத் தமிழ் மாநாடு 1986 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கியது. 3 ஆம் தேதி தமிழர் பண்பாட்டை எடுத்து இயம்பு ஊர்வலம் ஜெமினி பாலத்திலிருந்து தொடங்கிற்று.
இந்த மாநாட்டில்தான் ஊழல் நடந்துவிட்டதாகக் காங்கிரஸ் சட்டசபையில் பூகம்பம் கிளப்பியது. ஆனால், அது கிளம்பிய வேகத்திலேயே பொசுக்கென்று மறைந்துபோனது. காந்தியடிகள் உயிருடன் இருந்தபோது அமைச்சர்கள் 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறக்கூடாது என்று சொன்னார். அவர் மீதுதான் ஊழல் புகாரைக் காங்கிரஸ் முன்வைத்து நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை வலியுறுத்தியது.
மாறாக காங்கிரஸ் அமைச்சர்கள் 1000 ரூபாய் ஊதியம் பெற்றனர். அண்ணா அதை அரை பங்காகக் குறைத்து அமைச்சர்களுக்கு 500 ரூபாய் சம்பளம் என்பதை உறுதிசெய்தார். காங்கிரஸ் ஆட்சியில் அரசின் பழைய பேருந்துகளை ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கே விற்றுவந்தது. அதற்காக ஒரு 'கண்காணிப்புக் குழு'வை அமைத்தார் சி.என். அண்ணாதுரை.
இதைவிட உச்சமான ஒரு நல்ல காரியம் நடந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெள்ளை அதிகாரி கலெக்டர் ஆஷ் துரையை மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக் கொண்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் வாஞ்சி. அவரை தியாகியாக அங்கீகரித்து அவரது மனைவிக்குத் தியாகி பென்சன் வழங்கச் சட்டத்தில் இடமில்லை என நிராகரித்தது காங்கிரஸ் ஆட்சி.
தற்கொலை செய்த வாஞ்சியை தியாகியாகக் கருதச் சட்டத்தில் இடமில்லை என்றனர். அண்ணா, "வாஞ்சி தற்கொலை செய்துகொண்டாலும் அவரது உள்நோக்கம், சுதந்திரப் போராட்ட உணர்ச்சியே. அதை எண்ணித்தான் தியாகமாக ஏற்று நான் உத்தரவிட்டேன்' என்று சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணாதுரை பேசினார். காங்கிரஸ் காட்டாத கருணையை வாஞ்சியின் மனைவிக்கு அண்ணா காட்டினார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?













Click it and Unblock the Notifications