20 குழந்தைகள் உயிரை பறித்த இருமல் சிரப்.. தயாரித்தது தமிழக நிறுவனமாம்! 350+ விதிமீறல் கண்டுபிடிப்பு
சென்னை: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் குடித்து 20 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், அந்த மருந்தை உற்பத்தி செய்த நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் சுமார் 350+க்கும் மேற்பட்ட கடுமையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகத் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை ரிப்போர்ட் சமர்ப்பித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் குடித்த பல குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 20 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளனர். நாடு முழுக்க இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மருந்தைத் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரேசன் ( Sresan Pharmaceutical Manufacturer) என்ற நிறுவனம் தயாரித்தது தெரிய வந்தது.

இதையடுத்து மருந்துகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு தமிழ்நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துணை இயக்குநர் எஸ். குருபாரதி கடந்த அக்டோபர் 3ஆம் தேதி உத்தரவிட்டார்.
ஆய்வு
கோல்ட்ரிஃப் சிரப்பின் மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' (Coldrif) மருந்தில் 48.6% டயெத்திலீன் கிளைக்கால் (Diethylene glycol) என்ற ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது. தொழிற்சாலைகளில் மட்டும் பயன்படுத்தப்படும் அந்த ரசாயனத்தை நாம் சிறிதாக எடுத்துக் கொண்டாலும் கூட கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும். இந்தச் சோதனை முடிவைத் தொடர்ந்தே ஸ்ரேசன் மருந்து உற்பத்தியை நிறுத்துமாறு குருபாரதி உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
350+ விதிமீறல்கள்
இதற்கிடையே சம்பந்தப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறை ஆய்வு நடத்தியுள்ளது. அதில் 350க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாகத் தமிழ்நாடு ரிப்போர்ட் சமர்ப்பித்துள்ளதாக ஆங்கில ஊடகம் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.. இந்த விதிமீறல்கள் மிகக் கடுமையானதாகவும் முக்கியமானதாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த நிறுவனத்தில் அடிப்படை வசதிகள் இல்லை, தகுதிவாய்ந்த மருத்துவப் பணியாளர்கள் இல்லை.. மேலும், அந்த நிறுவனத்தில் சரியான பாதுகாப்பு நடைமுறைகளும் இல்லை எனவும் அவர்கள் கண்டறிந்தனர்.
இதன் மூலம் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து சுகாதாரமற்ற சூழலில் உற்பத்தி செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. அங்கு ஏர் ஹேண்ட்லிங் யூனிட்கள் (AHUs) இல்லை.. காற்றோட்டம் மோசமாக இருந்தது.. உபகரணங்கள் சேதமடைந்த அல்லது துருப்பிடித்த நிலையில் இருந்தன.. உற்பத்தி ஆலையின் வடிவமைப்பு கூட மாசுபாடு அதிகரிக்கும் வகையிலேயே இருந்தது என ஏகப்பட்ட குறைபாடுகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
வசதிகள் இல்லை
மேலும், அந்த மருந்து நிறுவனத்தில் அடிப்படையாக இருக்க வேண்டிய தரக் கட்டுப்பாட்டுத் துறை கூட இல்லை. மேலும், உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளை மேற்பார்வையிட்டு சோதனை செய்யவும் எந்தவொரு நபரும் இல்லையாம். மருந்துகளில் தவறு இருந்தால் அதைத் திரும்பப் பெறுவதற்கோ அல்லது தரக் குறைபாடுகளைக் கையாள்வதற்கோ நிலையான ஆபரேடிங் நடைமுறைகள் கூட அந்த நிறுவனத்தில் இல்லை. தயாரிக்கப்பட்ட மருந்தும் கூட எந்தவொரு உரிய பாதுகாப்பு நடைமுறைகளும் இல்லாமல் சேமிக்கப்பட்டுள்ளது.இதனால் அதில் தூசி உள்ளிட்டவை விழுந்து மாசடையும் சூழலே இருந்துள்ளது.
பெரிய விதிமீறல்
எல்லாவற்றையும் விட அந்த நிறுவனம் 50 கிலோ புரோப்பிலீன் கிளைக்காலை (propylene glycol) பில் கூட இல்லாமல் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இது புரோப்பிலீன் கிளைக்கால் சட்டவிரோதமாக வாங்கப்பட்டுள்ளதையே குறிக்கிறது. புரோப்பிலீன் கிளைக்கால் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என்றாலும் இருமல் மருந்தில் ஆபத்தான டையெத்திலீன் கிளைக்கால் (DEG) கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த டையெத்திலீன் கிளைக்கால் சிறிய அளவிலும் உடலில் சென்றாலும் உயிரிழப்பு கூட ஏற்படும். மத்தியப் பிரதேசத்திலும் இதன் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ரெடியான சிரப் மருந்துகளை மாற்றுவதற்கு நிறுவனம் பிளாஸ்டிக் குழாய்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு முறையான வடிகட்டுதல் அமைப்பு கூட இல்லையாம்.. மருந்து உற்பத்தியில் முக்கிய நிலைகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர் கூட சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாக அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications