Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் 21ல் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு துவக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதற்கான முதல்கட்ட கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் 19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட ஜெயிக்கா கட்டடத்தின் கட்டுமான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது:

MBBS doctor

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ம் தேதி துவங்குகிறது. அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 21ம் தேதி முதல் தமிழகத்தில் மருத்துவ தேர்வுக் குழு மூலமாக முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கவுள்ளது. அதற்கான முதல்கட்ட கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் 19 ம் தேதி வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மருத்துவத் தேர்வுக் குழு மூலமாக முதல்கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளது. அதற்கான முதல்கட்ட கலந்தாவிற்கான தரவரிசைப் பட்டியல் 19 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது

முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கிய பின்னர் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு,மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்திற்கான ஒதுக்கீடு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22, 23 ஆம் தேதி நடைபெறும். மேலும், இந்த ஆண்டு இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கும். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்க தமிழகத்தில் இருந்து மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், மத்திய அரசின் நிா்வாகத்தின்கீழ் இயங்கும் சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியும் உள்ளன. இவை தவிர, 21 தனியாா் மருத்துவக் கல்லூரிகள், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 11,500 மருத்துவ இடங்கள் உள்ளன. நடப்பு ஆண்டு நீட் தோ்வில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு தள்ளிப்போனது. உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பின்னா் ஆகஸ்ட் 14 முதல் கலந்தாய்வு நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்தது.

மாநிலத்தில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது. அந்த வகையில், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையதளங்கள் மூலம் விண்ணப்பப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்திருந்தது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 8 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+