கவுண்டர் அட்டாக்! அதிகாரிகள், அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய உத்தரவு! பொய் செய்திகளுக்கு செக்
சென்னை: மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வந்து இருக்கிறார். மக்கள் இடையே நம்பிக்கையையும், பாதுகாப்பையும், உறுதி செய்வதற்கு மக்கள் உடன் அரசு எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அரசு எடுக்கும் முடிவுகள், திட்டங்கள், கொள்கைகள், சாதனைகள் பற்றி அமைச்சர்கள், அரசு இயந்திரங்கள் மக்களுடன் பேச வேண்டும் என்று பிரதமர் மோடி கூட சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பும் பொய் செய்திகள், பிரச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த அஸ்திரத்தை கையில் எடுக்க கூறினார். அந்த அறிவிப்பு ஏன் வந்தது.. அதன் முக்கியத்துவம் என்ன? அதன்பின் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
அரசியலில் பிரச்சாரத்திற்கு இருக்கும் பவர்!

அரசியலில் பிரச்சாரம் என்பது மிக முக்கியம்.. மக்களிடையே உண்மையான கருத்துக்களை கொண்டு செல்வது ஒரு ஆட்சிக்கு, கட்சிக்கு மிக அவசியமான ஒன்று. ஒரு முறையான திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என்பது மக்களின் கருத்துக்களை மாற்றும், அவர்களின் எண்ணங்களை மாற்றும், அவர்கள் வைத்துள்ள பார்வைகளை மாற்றும், ஏன் முறையான பிரச்சாரம் என்பது தேர்தல் முடிவுகளை கூட மாற்றும் வல்லமை கொண்டது. எதிர்க்கட்சிகள் பொதுவாக அரசின் கொள்கைகள், முடிவுகளை விமர்சனம் செய்யும் வகையில் பிரச்சாரங்களை முன்னெடுக்கும். சமயங்களில் பொய்யான கருத்துக்களை கூட அரசு பிரச்சாரம் மூலம் மேற்கொள்ளும்.
மோடி அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் அரசு மேற்கொள்ளும் பணிகளைப் பற்றிய துல்லியமான தகவல்களைப் பொதுமக்கள் பெறுவதை உறுதிசெய்வது மட்டுமின்றி அதன் சாதனையை மக்களிடம் கொண்டு செல்வது மட்டுமின்றி.. அரசு மீது நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதும் நோக்கம் ஆகும். இதற்கு அரசு முறையாக Narrative உருவாக்குவது.. பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்வது அவசியம். தேர்தல் நேரம் என்று இல்லாமல் மற்ற நேரங்களிலும் இது மிக அவசியம்.
சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி, பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. இந்திய ஜனநாயகக் கட்டமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கும், மிகப்பெரிய மாற்றங்களைச் செய்வதற்கும் பாஜக திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் பொய்யாக குற்றம் சாட்டியது. இந்தக் கூற்றுக்கள் வாக்காளர்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. எவ்வாறாயினும், பாஜக இந்த குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுத்தது, பிரதமர் மோடி அவற்றை ஆதாரமற்றது என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சி என்றும் நிராகரித்தார்.
பொய்யான பிரச்சாரங்களுக்கு பதிலடி தருவது:
தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகள் நிறைய பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டது. அதில், முக்கியமான ஒன்று.. பாஜகவின் வெற்றியானது தேசத்தின் அடிப்படை கட்டமைப்பை உடைக்கும், அரசியலமைப்பு திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என்று பொய்யாக பிரச்சாரம் செய்தது. ஆனால், இதுபோன்ற மாற்றங்களைச் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று பாஜக பலமுறை பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. பிரதமர் மோடி கூட கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடனான தனது கூட்டங்களில், இந்த நிலைப்பாட்டை பொதுமக்களிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த பொய்யான பிரச்சாரத்தை உடைக்க வேண்டும் என்று மோடி உறுதியாக நிலைப்பூண்டார்.
எதிர்க்கட்சிகளின் மற்றொரு குறிப்பிடத்தக்க பொய்யான பிரச்சாரம் என்னவென்றால், பாஜக அரசாங்கம் மீண்டும் வந்தால் நாட்டில் சகிப்புத்தன்மை குறையும்.. இது மோசமான சூழலை உருவாக்கும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நிலைமை மாறும் என்று பிரச்சாரம் வைத்துய். சிறுபான்மையினரின் வாக்குகளை பா.ஜ.க.வுக்கு எதிராக திரட்டி அவர்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக பாஜக இருப்பதாக பொய்யான சித்தரிக்கும் வகையில் இந்த பிரச்சாரம் அமைந்தது. ஆனால், "சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்" என்ற முழக்கத்தின் நம்பிக்கை கொண்டு மக்கள் மோடிக்கு மீண்டும் வாக்களித்தனர்.
வளர்ச்சிதான் முக்கியம்.. என்று பாஜக உறுதியாக இருந்து இந்த பிரச்சாரத்தை எதிர்கொண்டது. மதம் அல்லது சமூகத்தைப் பொருட்படுத்தாமல் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து குடிமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் கூறினார். இந்த வலிமையான பிரச்சாரம் மக்களிடம் சென்று சேர்ந்தது.
தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளிலும் இதேபோல் எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டது. குறிப்பாக லடாக்கில் சீன ஊடுருவல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை குறிவைத்தன. இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க பாஜக தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். எவ்வாறாயினும், அரசாங்கம் இந்தக் கூற்றுக்களை எதிர்த்து, இந்தியப் பகுதி எதுவும் சீனாவிடம் இழக்கப்படவில்லை என்றும், இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் பதில் பிரச்சாரம் மேற்கொண்டது. எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு பாஜக முறையாக பதிலடி கொடுத்தது. .
பிரச்சாரத்தின் முக்கியத்துவம்:
அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான தனது சமீபத்திய சந்திப்பில் கூட பிரதமர் மோடி இதை சுட்டிக்காட்டினார். சரியான நேரத்தில் மக்களுடன் மேற்கொள்ள வேண்டிய உரையாடல்களின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்யவும், அரசின் பிரச்சாரத்தை வேகமாக மக்களிடம் கொண்டு செல்லவும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை தவறான பிரச்சாரத்தை தடுப்பது மட்டுமல்ல.. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகப்படுத்துவதையும் உறுதி செய்கிறது.
மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசு அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தி உள்ளார். கூட்டாட்சி தத்துவம் மீது மோடி கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் எடுத்துக்காட்டுகிறது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் தடையின்றி ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதன் மூலம்.. மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேரும். அதோடு அதன் பலன்கள் மக்களிடம் நேரடியாக எளிதில் கிடைக்கும். அரசின் திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு தெரிய வரும்.
பிரதமர் மோடியின் இந்த உத்தரவிற்கு பின் இன்னொரு காரணமும் இருக்கிறது. எந்த திட்டத்தை பற்றியும் நல்ல தகவல்களை மக்களுக்கு உடனே கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால்.. அதை பற்றிய பொய்யான தகவல்கள் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தடுக்கவே அரசு எடுக்கும் முடிவுகள், திட்டங்கள், கொள்கைகள், சாதனைகள் பற்றி அமைச்சர்கள், அரசு இயந்திரங்கள் மக்களுடன் பேச வேண்டும் என்று பிரதமர் மோடி கூட சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தார்
முடிவு:
எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்யான பிரச்சாரத்திற்கு முடிவுரை எழுதுவது, மக்களிடம் உண்மைகளை கொண்டு செல்வது, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை மனதில் வைத்தே பிரதமர் மோடி இந்த உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார். ஒரு அரசாங்கம் சரியாக செயல்பட.. மக்கள் தவறாக வழிநடத்தப்படாமல் இருக்க இது போன்ற நடவடிக்கைகள் மிக முக்கியம். மோடி அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புத்தன்மை மற்றும் பயனுள்ள தகவல்தொடர்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது . ஒரு அரசை திறம்பட நிர்வகிப்பதில் வெற்றிபெறுவது மட்டுமல்லாமல் அரசியல் அரங்கில் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் கட்டுக்கதைகளும் பாஜக வெற்றிபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications