Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

50 சதவீத மானியத்தில் "அஸீல்" நாட்டுக்கோழி பண்ணை.. 626 சதுர அடி நிலம் உள்ளோருக்கான சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டு கோழிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், வேலைவாய்ப்பை உயர்த்தவும், நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் (Country Poultry Farm Subsidy Scheme) ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது.. விவசாயிகள் நேரடியாக பயன்பெறக்கூடிய இந்த திட்டம் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், தற்போது சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தமிழக கால்நடை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தமிழக அரசு ஏராளமான திட்டங்களை, சலுகைகளை அறிவித்து வருகிறது.

625 sq feet land subsidy poultry farm 625

அந்தவகையில், 100 நாட்டுக்கோழிப் பண்ணை வைத்து தொழிலை துவங்க உள்ளோருக்கு அரசு தரப்பில் 50% மானியம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.. கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள், அலகு) நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால், எண்ணற்ற விவசாயிகளுக்கு நேரடி பலனை இந்த திட்டம் வழங்கி வருகிறது.


குறைந்த முதலீடு

அதுமட்டுமல்ல, குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் வருமானத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும்.

சென்னை, நீலகிரி தவிர்த்து பிற மாவட்டங்களில், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், கோழிப்பண்ணை அமைப்பதற்கான இந்த திட்டத்தை கால்நடை துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் வேலையில்லாமல் இருக்கும் பல பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பல தொழில்முனைவோர் வளர்ந்து வருகின்றனர்.

சேவல்கள் இறைச்சிகள்

இதில், ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக் கோழிக் குஞ்சுகள் அந்தந்த மாவட்ட கால்நடைப் பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படுகின்றன.. முட்டைகள், குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமும், வளர்ந்த பெண் கோழிகள் (ம) சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்தும், ஒரு பயனாளி வருடத்திற்கு ரூ.2,31, 000 வரை வருமானமும் ஈட்டப்படுவதால், விவசாயிகளின் வரவேற்பை இந்த திட்டம் பெற்று வருகிறது.

நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க அதிகபட்சமாக ரூ.1.65,625/- வரை மாநில அரசால் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50% மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.. மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பு தொகையை பயனாளிகள் வங்கி கடன் மூலமாகவோ அல்லது சொந்த நிதி ஆதாரங்கள் மூலமாகவோ திரட்டி கொள்ளலாம்.

அஸீல் இன நாட்டுக்கோழி

இந்நிலையில், இந்த திட்டம் குறித்து தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, "தமிழகம் முழுதும் 360 பயனாளிகளுக்கு, 6 கோடி ரூபாய் மதிப்பில், தலா 250 எண்ணிக்கையிலான நான்கு வார வயதுடைய அஸீல் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படும். இந்த குஞ்சுகள், ஓசூர் கோழிப்பண்ணையில் இருந்து வழங்கப்படும். விண்ணப்பதாரர், சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

கோழி கொட்டகை அமைக்க, குடியிருப்புகளில் இருந்து விலகியுள்ள பகுதியில், குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க தேவையான மொத்த செலவில், 50 சதவீதம் மானியம், அதிகபட்சமாக, ஒரு லட்சத்து 65,625 ரூபாய் வரை, மாநில அரசால் வழங்கப்படும்.

மிகுந்த நம்பிக்கை

பழங்குடி இனத்தவர், விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தவராக இருக்கக்கூடாது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கோழிப்பண்ணையை பராமரிப்பவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரை அணுகி, உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவித்துள்ளனர்... தமிழக அதிகாரிகளின் இந்த அறிவிப்பானது கால்நடை விவசாயிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+