பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில்.. திறந்தவெளி காரில் காதல் ஜோடி செய்த வேலை.. இளைஞர் கைது
சென்னை: பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் திறந்தவெளி காரில் பீர் குடித்தபடி சென்ற காதல் ஜோடி குறித்த வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரத்தில் மது அருந்தயபடி சென்ற காதல் ஜோடியை கைது செய்ய வேண்டும் என்று பலரும் சென்னை மற்றும் தாம்பரம் போலீஸை டேக் செய்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த இளைஞர் கைதாகி உள்ளார்.
சென்னையிலேயே மிகவும் பரபரப்பான சாலை என்றால் அது ஜிஎஸ்டி சாலை தான். தாம்பரம் முதல் கிண்டி வரை உள்ள ஜிஎஸ்டி சாலையில் வாகன போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும். இந்த சாலை சில மணி நேரத்திலேயே பல்லாயிரம் வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லும் இடமாகும். விமான நிலையம் அமைந்துள்ள இந்த சாலை வழியாகவே திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு போக முடியும்.

இவ்வளவு முக்கியத்தும் வாயந்த தாம்பரம், பல்லாவரம் ஜி எஸ் டி சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருப்பு நிற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென ஜி எஸ் டி சாலையில் இருந்து பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் சென்றது.
அப்போது திடீரென காரின் மேற்கூரையில் உள்ள கண்ணாடி திறந்தது. காருக்குள் இருந்து வெளியே வந்த காதல் ஜோடி, திறந்த வெளியில் நின்றபடி பேசிக்கொண்டே சென்றார்கள். திடீரென இருவரும் கொஞ்சியபடி பேசிக் கொண்டார்கள் . அப்போது காரில் இருந்த அந்த இளைஞர், கையில் பீர் பாட்டிலை வைத்துக் கொண்டு பெண்ணுடன் ஜாலியாக பேசிக்கொண்டே பீர் குடித்தபடி சென்று கொண்டிருந்தார்.
மிகவும் பரபரப்பான சாலையில் அந்த காருக்கு முன்னும், பின்னும் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் , அதனை சுத்தமாக கண்டுகொள்ளாமல் அநாகரிகமாக நடந்து கொண்ட காதல் ஜோடியின் இந்த செயல், வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பலர் சென்னை போலீஸ் மற்றும் தாம்பரம் போலீசாரை டேக் செய்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் பீர் பாட்டிலுடன் ஜாலியாக உலா வந்தது, பெருங்குடியை சேர்ந்த சஞ்சய் (வயது 23) என்பது தெரியவந்தது. காரின் பதிவு எண்ணை வைத்து கண்டுபிடித்த போலீசார் சஞ்சயை கைது செய்ததுடன், அந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications