செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்.. தடய அறிவியல் இயக்குநரை அமலாக்கத்துறை விசாரிக்க தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், தடய அறிவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநரை விசாரிக்க தடை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 - 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

senthil balaji chennai court

இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு இதுதொடர்பாக செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி, அவரை கைது செய்தது அமலாக்கதுறை.

பின்பு செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை கைதியாக சிறையில் இருந்த அவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கு தொடர்பான பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் வழக்கு ஆவணங்களின் நகல்களை தங்களுக்கு வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் கேட்டிருப்பதாகவும் அதுவரை, வழக்கில் சாட்சியாக உள்ள தடய அறிவியல் துறையின் கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை விசாரிக்க தடை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி, தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து விட்டு, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு அனுமதி அளித்த நீதிபதி கார்த்திகேயன், இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+